சென்னைக்கு நல்ல செய்தி.. 81 சதவீதம் டிஸ்சார்ஜ்.. இவ்வளவு தான் நோயாளிகள்.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பும் வேகமாக குறைந்து வருகிறது. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. சென்னையில் எந்த மண்டலத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்கிற விவரத்தை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 165 714 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 50 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இதுவரை 84598 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 68193 பேர் குணம் அடைந்துவிட்டனர். தற்போது 14,997 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சென்னையில் உள்ளனர். 1407 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக ஆக்டிவ் நோயாளிகளின் விவரத்தை வெளியிட்டுள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

 தண்டயார் பேட்டையில் சரிவு

தண்டயார் பேட்டையில் சரிவு

  • திருவெற்றியூர்: குணம் அடைந்தவர்கள்: 2575. உயிரிழந்தவர்கள் 73. ஆக்டிவ் நோயாளிகள் 505
  • மணலி: குணம் அடைந்தவர்கள்: 1288. உயிரிழந்தவர்கள் 17. ஆக்டிவ் நோயாளிகள் 239
  • மாதவரம்: குணம் அடைந்தவர்கள்: 2199 உயிரிழந்தவர்கள் 35. ஆக்டிவ் நோயாளிகள் 415
  • தண்டையார் பேட்டை: குணம் அடைந்தவர்கள்: 7688. உயிரிழந்தவர்கள் 191. ஆக்டிவ் நோயாளிகள் 765
  • இராயபுரம்: குணம் அடைந்தவர்கள்: 8902. உயிரிழந்தவர்கள் 175. ஆக்டிவ் நோயாளிகள் 1100
 அம்பத்தூர் குறைவு

அம்பத்தூர் குறைவு

  1. திருவிக நகர்: குணம் அடைந்தவர்கள்: 5519. உயிரிழந்தவர்கள் 148. ஆக்டிவ் நோயாளிகள் 1108
  2. அம்பத்தூர்: குணம் அடைந்தவர்கள்: 3271. உயிரிழந்தவர்கள் 52. ஆக்டிவ் நோயாளிகள் 892
  3. அண்ணா நகர்: குணம் அடைந்தவர்கள்: 7897. உயிரிழந்தவர்கள் 52. ஆக்டிவ் நோயாளிகள் 1561
  4. தேனாம்பேட்டை: குணம் அடைந்தவர்கள்: 7778. உயிரிழந்தவர்கள் 206. ஆக்டிவ் நோயாளிகள் 1345
  5. கோடம்பாக்கம்: குணம் அடைந்தவர்கள்: 7331. உயிரிழந்தவர்கள் 147. ஆக்டிவ் நோயாளிகள் 2082
 அடையாறு அதிகம்

அடையாறு அதிகம்

  • வளசரவாக்கம்: குணம் அடைந்தவர்கள்: 3385. உயிரிழந்தவர்கள் 48. ஆக்டிவ் நோயாளிகள் 730
  • ஆலந்தூர்: குணம் அடைந்தவர்கள்: 1889. உயிரிழந்தவர்கள் 32. ஆக்டிவ் நோயாளிகள் 512
  • அடையாறு: குணம் அடைந்தவர்கள்: 4371. உயிரிழந்தவர்கள் 81. ஆக்டிவ் நோயாளிகள் 1088
  • பெருங்குடி: குணம் அடைந்தவர்கள் 1847. உயிரிழந்தவர்கள் 30. ஆக்டிவ் நோயாளிகள் 338
  • சோழிங்கநல்லூர்: குணம் அடைந்தவர்கள்: 1487. உயிரிழந்தவர்கள் 12. ஆக்டிவ் நோயாளிகள் 372
  • பிற மாவட்டங்கள்: குணம் அடைந்தவர்கள்: 766. உயிரிழந்தவர்கள் 16. ஆக்டிவ் நோயாளிகள் 1945
  • சென்னை மொத்த விவரம்: குணம் அடைந்தவர்கள்: 68193. உயிரிழந்தவர்கள் 1407. ஆக்டிவ் நோயாளிகள் 14997

Recommended Video

    Tamilnadu Lockdown Extension | Salem District பிரிப்பு பற்றி Edappadi Palanisamy பதில்
     கொரோனா பாதிப்பு குறைவு

    கொரோனா பாதிப்பு குறைவு

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உயிரிழப்பு விகிதம் திருவெற்றியூர் மண்டலத்தில் அதிகமாக உள்ளது. அங்கு 2.32 சதவீதம் பேர் இறந்துள்ளனர். சோழிங்க நல்லூர் மண்டலத்தில்தான் சென்னையிலேயே மிக குறைவான உயிரிழப்பு (0.69 சதவீதம்) விதிகம் உள்ளது. சென்னையிலேயே மிக அதிக பட்சமாக தண்டையார் பேட்டையில் 89 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையிலேயே மிக குறைந்தபட்சமாக கோடம்பாக்கத்தில் 77 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் ஒட்டுமொத்தமாக 81 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். 18 சதவீதம் ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 1.66 சதவீதம் நோயாளிகள் சென்னையில் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+