சென்னை கட்டுமானங்களுக்கு வரும் செக்.. உருவாக்கப்படும் "பவர் புல்" அமைப்பு! ரியல் எஸ்டேட்டே மாறுதுங்க
சென்னை: சென்னை பெருநகரப் பகுதியில் (சிஎம்ஏ) அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைக் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க மாநில அரசின் ஒப்புதலைக் கோரி கிரேட்டர் சென்னை மாநகராட்சி (ஜிசிசி) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னையில் பல்வேறு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னையில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. பல்வேறு புதிய கட்டுமானங்கள், வீடுகள், அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் சில கட்டுமானங்கள் முறைகேடாக கட்டப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்தது, கே பி பார்க் கட்டிட மோசடி என்று பல விஷயங்களை அடிப்படையாக வைத்து சமீபத்தில் மாவீரன் என்ற படம் கூட எடுக்கப்பட்டது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த படம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுவதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு மற்றும் வாய்ஸ் கொடுத்த விஜய்சேதுபதி என்று பெரிய டீம் இந்த படத்திற்காக வேலை செய்துள்ளது.
விழிப்புணர்வு: இதன் காரணமாக தற்போது மக்கள் இடையே குடியிருப்பு கட்டுமானம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்பட்டு உள்ளது. அதன்பின்தான் சமீபத்தில் கூட இடிந்து விழும் அபாயத்தில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் என்ற பெயரில் 17 மாடி குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில் இந்த கட்டிடம் தற்போது உள்ளுக்குள்ளேயே இடிந்து விழ தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் சென்னை பெருநகரப் பகுதியில் (சிஎம்ஏ) அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைக் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க மாநில அரசின் ஒப்புதலைக் கோரி கிரேட்டர் சென்னை மாநகராட்சி (ஜிசிசி) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) கோரிக்கை விடுத்துள்ளன.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் தலைமையில் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் நகரமைப்பு மற்றும் ஊரக திட்டமிடல் இயக்குநரகம் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. சிஎம்டிஏ-வின் கீழ் வரும் அங்கீகரிக்கப்படாத உயரமான கட்டிடங்களைக் கூட கண்காணிக்க ஆணையருக்கு இது அதிகாரம் அளிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 14 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை கண்காணிப்பதற்கு பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்து இருந்தது. சென்னையில் அனுமதியில்லாத கட்டுமானங்கள் 4 வகையாக கட்டப்படுகின்றன. அதன்படி திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், அனுமதிக்கு மீறி கூடுதல் மாடிகள் கொண்ட கட்டடங்கள், குடியிருப்புக்கு அனுமதி பெற்று, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல், விதிவிலக்கான கட்டுமானங்கள் என நான்கு முக்கிய பிரிவுகள் உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையரிடம் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில்தான் சென்னை பெருநகரப் பகுதியில் (சிஎம்ஏ) அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைக் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க மாநில அரசின் ஒப்புதலைக் கோரி கிரேட்டர் சென்னை மாநகராட்சி (ஜிசிசி) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications