அரசு மருத்துவமனையில் சென்னை மாநகராட்சி கவுன்சிலருக்கு பிரசவம்.. பிறந்த அழகான ஆண் குழந்தை!
சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலரான ரேணுகா, தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்காமல், அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சிகிச்சை பெற்று வந்ததுடன், அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்டார்.
அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வதை வசதியானவர்கள் விரும்புவது இல்லை. ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே விரும்பாதவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பல இடங்களில் மிகச்சிறப்பாக இருக்கின்றன. இன்றும் பல்லாயிரம் மக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகள் குறித்து தவறான புரிதலால் வசதியானவர்கள் மற்றும் படித்தவர்கள் தனியார் மருத்துவனைகளில் குழந்தை பெறும் நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலரான ரேணுகா அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவைச் சேர்ந்தவர் 27 வயதாகும் ரேணுகா . இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் ஆவார், சென்னை மாநகராட்சி 42-வது வார்டு கவுன்சிலராக பணியாற்றுகிறார். இவருடைய கணவர் காவேரிசெல்வம் (33) வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் மாநகராட்சி கவுன்சிலர் ரேணுகா, மீண்டும் கர்ப்பமானார். இதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
ரேணுகா, நேற்று (வியாழக்கிழமை)சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுஇந்நிலையில் அரசு மருத்துவமனைகள் குறித்து தவறான புரிதலால் வசதியானவர்கள் மற்றும் படித்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெறும் நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலரான ரேணுகா அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளார். த்தார்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலரான ரேணுகா, தனியார் மருத்துவனையில் பிரசவம் பார்க்காமல், அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். தற்போது அரசு மருத்துவமனையிலேயே குழந்தை பெற்றுக்கொண்டது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையினை அணுகாமல் அரசு சார்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதை கவுன்சிலர் ரேணுகா விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications