பிறப்பு சான்றிதழ், இபி, சொத்து வரி! இனி எல்லா சேவைகளையும்.. வாட்ஸ் ஆப் வழியாகவே பெறலாம்! அரசு அதிரடி
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகள் இப்பொழுது WhatsApp-ல் வழங்கப்படும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சேவைகளை எளிதாகப் பெறும் வகையில், வாட்ஸ் அப் செயலி வழியாகப் புதிய சேவை முறை அறிமுகமாகவுள்ளது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் புதிய சேவையின் கீழ்,

• பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யவேண்டுமா?
• சொத்து வரி மற்றும் பிற வரிகளைச் செலுத்த வேண்டுமா?
• மாநகராட்சியிடம் ஏதாவது புகாரைப் பதிவு செய்ய வேண்டுமா?
• சமுதாயக் கூடம், முதல்வர் படைப்பகம் போன்ற சேவைகளுக்கு முன்பதிவு செய்யவேண்டுமா மாநகராட்சியின் அனைத்து சேவைகளுக்கும் இனி இந்த எண்ணை 9445061913 தொடர்பு கொள்ளலாம். 'வணக்கம்' என பதிவிட்டு சேவை தளத்திற்குள் செல்லுங்கள்.
வாட்ஸ் ஆப் சேவைகள் - தமிழ்நாடு
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, சுமார் 50 அரசு சேவைகள் வாட்ஸ்அப் வழியாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் கைபேசியிலேயே இந்தச் சேவைகளைப் பெற முடியும் என்பது இதன் முக்கிய அம்சம்.
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை, மின்சார மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துதல், மாநகராட்சி வரிகள் செலுத்துதல், குறைகள் நிவர்த்தி செய்தல், மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு போன்ற வசதிகளை வழங்குகிறது. இவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் சேட்பாட் (chatbot) மூலம் கிடைக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மெட்டாவின் ரவி கார்க் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மெட்டா சேவைகள் வாட்ஸ் ஆப்
குடிமக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும், செயல்திறனை மேம்படுத்துவதிலும் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகள் தொடங்கப்படவுள்ளன.
ஒரே எண்ணின் மூலம் அணுகக்கூடிய இந்தச் சேவையின் முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் அணுக முடியும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.
இந்தச் சேட்பாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும். குடிமக்கள் இதன் மூலம் புகார்களைப் பதிவு செய்யவும், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் செலுத்தவும், மாநகராட்சி வரிகள் கட்டவும், மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் முடியும். இவை அனைத்தும் ஒரே அரட்டை சாளரத்திற்குள் நடைபெறும்.
மெட்டா தமிழக அரசு கூட்டணி - வாட்ஸ் ஆப் சேவை
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிகழ்வில் பேசுகையில், "மக்களை மையப்படுத்திய, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்குத் தலைமை தாங்கும் தெளிவான தொலைநோக்குப் பார்வையை மாநில அரசு கொண்டுள்ளது. மெட்டாவுடனான இந்த கூட்டணி அந்தப் பயணத்தில் ஒரு தீர்க்கமான படியாகும்," என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும், "இனி வாட்ஸ்அப் மூலம் எளிமையாகச் சேவைகளைப் பெற முடியும். மின்-ஆளுமைக்கான மாநிலத்தின் அர்ப்பணிப்பையும் வாட்ஸ்அப்பின் எளிமையையும், அதன் பரவலான சென்றடையும் தன்மையையும் இணைப்பதன் மூலம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொழில்நுட்பம் மிக எளிமையான முறையில் பயன்படுவதை உறுதி செய்கிறோம். இது மக்கள் குடிமக்கள் சேவைகளை அணுகும் விதத்தை மறுவரையறை செய்கிறது," என்றார்.
மெட்டா இந்தியாவின் வணிகச் செய்திப்பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறுகையில், "வாட்ஸ்அப் என்பது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்குப் பரிச்சயமான ஒரு தளம், மேலும் அதன் எளிமையும் பயன்படுத்த எளிதான தன்மையும் அரசு சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை வழங்க இது ஒரு சிறந்த தளமாக அமைகிறது," என்றார்.
"குடிமக்கள் அரசு சேவைகளில் ஈடுபடும் முறையை மாற்றியமைக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சியில் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது சேவைகளை அனைவருக்கும் மிகவும் வசதியானதாகவும், திறமையானதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுகிறது," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications