குப்பையில் இருந்தும் சம்பாதிக்கலாம்.. கூடவே விவசாயிகளுக்கும் ஜாக்பாட்! சென்னை மாநகராட்சி மெகா பிளான்
சென்னை: தலைநகர் சென்னையில் கழிவுகள் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், இதைச் சரி செய்யச் சென்னை மாநகராட்சி பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் குப்பைகள் தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் பலர் புதிதாகக் குடியேறி வரும் நிலையில், இங்கே மக்கள்தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் சென்னையில் உற்பத்தியாகும் கழிவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கழிவுகள் எல்லாம் நகரில் இருக்கும் குப்பைக் கிடங்குகள் பக்கமே செல்கிறது. இது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது.
பிரச்சினை: ஆனால், கவலை வேண்டாம். சென்னை மாநகராட்சிக்கு விடிவு காலம் வரப்போகிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நகரின் இரண்டு பெரிய குப்பைக் கிடங்குகளில் குப்பை கொட்டுவதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சென்னை மாநகராட்சி.. குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குப்பைகளைக் கையாள்வதில் புதுமையான நடவடிக்கைகளைப் புகுத்துவதன் மூலம் இதைச் செய்ய உள்ளதாகக் கூறுகிறார் சென்னை கமிஷ்னர் ஜெ ராதாகிருஷ்ணன்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "2001இல் சென்னையில் ஒரு நாளைக்கு 2,500 டன் கழிவுகளைக் கையாள வேண்டி இருந்தது. இப்போது தினசரி சென்னையில் கழிவின் அளவு 6,150 டன்களாக அதிகரித்துள்ளது.. ஆனால், மாநகராட்சியால் இப்போது தினசரி 1,800 டன் கழிவுகளை மட்டுமே கையாள முடிகிறது.
குப்பைக் கிடங்குகள்: 2000-01ஆம் ஆண்டில், பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்படும் மாசை குறைக்கும் ஆப்ஷன்களை சென்னை மாநகராட்சி ஆய்வு செய்தது. அங்குத் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டுவது தீர்வு இல்லை.. இப்போது 20 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மாறிவிட்டது, மக்களிடையே கூட விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
கழிவுகளை கையாள்வது மக்களின் பொறுப்பு என்பதை அவர்களை உணர வைத்து நாம் அதை மக்கள் இயக்கமாக மாற்றாத வரை கழிவுகளை கையாள்வதில் சிறந்த நிலையை அடைய முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
நடவடிக்கை தேவை: நகரில் உற்பத்தியாகும் கழிவுகளைக் குப்பை கிடங்குகளில் கொட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எவ்வளவு பெரிய குப்பைக் கிடங்காக இருந்தாலும் அதுவும் ஒரு கட்டத்தில் நிரம்பவே செய்யும். எனவே, குப்பைகளை பிராசஸ் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையைச் சென்னை மாநகராட்சி இப்போது எடுத்து வருகிறது.
வரும் 2030இல் சென்னையில் குப்பைகளை பிராசஸ் செய்யும் நமது திறன் என்பது இங்கே உற்பத்தியாகும் கழிவுக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது நகரில் உற்பத்தியாகும் 90% கழிவுகள் முறையாக பிராசஸ் செய்யப்படும் என்றும் வெறும் 10%க்கும் குறைவான கழிவுகள் மட்டும் குப்பைக் கிடங்கிற்குச் செல்லும் என்றும் நகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குப்பையில் இருந்து நிதி: நகரில் இப்போது சில இடங்களில் குப்பைகளில் இருந்து உரத்தைத் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அதன்படி நம்ம ஊரு அறக்கட்டளை புதுப்பேட்டை, கண்ணம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மாநகராட்சியிடம் இருந்து 30 டன் குப்பைகளைப் பெற்று அதில் இருந்து 10 டன் உரத்தை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த உரம் ஒரு கிலோ ₹7க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இதை வாங்க விவசாயிகளும் ஆர்வம் காட்டுகிறார்களாம். இதனால் இதுபோன்ற அதிக மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லாப நோக்கமின்றி செயல்படும் இதுபோன்ற மையங்களால் ஒரு பக்கம் குப்பைகளும் எளிதாக பிராசஸ் செய்யப்படுகிறது. மறுபுறம் விவசாயிகளுக்கும் குறைந்த நிலையில், உரம் கிடைக்கிறது.
குப்பையைப் பணமாக மாற்றும் ஒரே ஒரு வழிதான் இது. இதுபோல கழிவுகளில் இருந்து பணத்தை ஈட்டப் பல வழிகள் இருக்கிறது. அப்படி செய்தால் நகரில் குப்பை கிடங்குகளுக்கு செல்லும் குப்பையும் பெருமளவு குறையும். அதேபோல இவை மாநகராட்சிக்கும் ஒரு நிதி அதரமாக மாறும்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications