சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் சற்றும் குறையாத கொரோனா பாதிப்பு.. மண்டல வாரியாக முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6750 உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 1171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டல வாரியான நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு சோதனையின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 639 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 12445 பேருக்கு 13081 சாம்பிள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தமிழகத்திற்குள் 558 பேருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் 81 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து சுதந்திரமான விசாரணை கேட்கும் இந்தியாகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து சுதந்திரமான விசாரணை கேட்கும் இந்தியா

சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 6268 ஆக இருந்த நிலையில் நேற்று 482 அதிகரித்து 6750 ஆக உயர்ந்துள்ளது. மண்டல வாரியான பாதிப்பு நிலவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இராயபுரத்தில் 14பேர் பலி

இராயபுரத்தில் 14பேர் பலி

சென்னையில் அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 1171 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 282 பேர் குணம் அடைந்துள்ள நிலையில் 889 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையிலேயே அதிகபட்சமாக 14 பேர் இதுவரை இராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இராயபுரம் மண்டலத்திற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 1037 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 233 பேர் குணம் அடைந்துள்ள நிலையில் 804 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோடம்பாக்கம் மண்டலத்திற்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவிக நகரில் 9 பேர் பலி

திருவிக நகரில் 9 பேர் பலி

திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 781 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 299 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 482 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவிநகர் மண்டலத்தில் கொரோனாவால் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் 741 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 173 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 568 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை தேனாம்பேட்டை மண்டலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

வளசரவாக்கம் நிலவரம்

வளசரவாக்கம் நிலவரம்

தண்டையார் பேட்டை மண்டலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 576 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 118 பேர் குணம் அடைந்து விட்டார்கள் , 458 பேர் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தண்டையார் பேட்டை மண்டலத்தில் கொரோனாவால் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 519 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 89 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 430 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை வளசரவாக்கம் மண்டலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடையாறு நிலவரம்

அடையாறு நிலவரம்

அண்ணா நகர் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 546 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 134 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 412 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை அண்ணா நகர் மண்டலத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாறு மண்டலத்தில் கொரோனாவால் 363 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 45 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 318 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை அடையாறு மண்டலத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவெற்றியூரில் பலி இல்லை

திருவெற்றியூரில் பலி இல்லை

அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனாவால் 317 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 412 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை அம்பத்தூர் மண்டலத்தில் யாரும் கொரோனாவால் இறக்கவில்லை. திருவெற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்றால் 147 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 19 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 128 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை திருவெற்றியூர் மண்டலத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர்

மாதவரம் மண்டலத்தில் கொரோனாவால் 120 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 13 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 107 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாதவரம் மண்டலத்தில் கொரோவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆலந்தூர் மண்டலத்தில் கொரோனாவால் 80 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 49 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 71 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆலந்தூர் மண்டலத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கொரோனாவால் 95 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 90 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

எவ்வளவு பேர் பாதிப்பு

எவ்வளவு பேர் பாதிப்பு

பெருங்குடி மண்டலத்தில் கொரோனாவால் 86 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 74 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை பெருங்குடி மண்டலத்தில் யாரும் கொரோனாவால் இறக்கவில்லை. மணலி மண்டலத்தில் கொரோனாவால் 86 பேர் பாதிக்கப்பட்டனர்.. இவர்களில் 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 80 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மணலி மண்டலத்தில் யாரும் கொரோனாவால் பலியாகவில்லை. ஒட்டுமொத்தமாக சென்னையில் 6750 கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1498 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில் 5167 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
chennai covid 19 cases detailed report of may 18th, rayapuram zone rise to 1171 cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X