சென்னையில் சைக்ளோத்தான்.. இதான் ஸ்பெஷலே! உதயநிதி தலைமையில் அசத்தும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்!
சென்னை: சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி சைக்ளோத்தான் நடைபெற உள்ளது. முதல் முறையாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக நடத்துவோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரும் அக்டோபர் 8ஆம் தேதி சைக்ளோதான் (Cyclothon) நடைபெற உள்ளது. HCL நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சைக்கிளிங் போட்டியினை நடத்த உள்ளது. இதன் அறிமுக கூட்டம் சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அப்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சைக்ளோதான் டி-சர்ட்களை அறிமுகப்படுத்தினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தொடர்ச்சியாக பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், சைக்கிளிங் போட்டி அக்டோபரில் நடைபெறவுள்ளது. HCL Cylcothon 2023 அக்டோபர் 8 அன்று சென்னையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உதயநிதி பேச்சு: மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்தியத் துணைக் கண்டத்தின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதில் நமது முதலமைச்சர் முதல் நாளிலிருந்தே மிகத் தெளிவாகக் கூறி வருகிறார். நமது தமிழ்நாடு முதல்வரின் திறமையான தலைமையின் கீழ், தமிழ்நாட்டை விளையாட்டு சக்தியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
வரலாற்று ரீதியாக, பல விளையாட்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் செழுமையான பாரம்பரியம் எங்களிடம் உள்ளது. மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை பொறாமைப்படும் வகையில் ஒழுங்கமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஒரு முன்னோடி என்பதை நிரூபித்துள்ளது

விளையாட்டு தலைநகரம்: உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளை மாநிலத்திற்கு கொண்டு வருவதன் மூலமும், விளையாட்டுக்கான உலகளாவிய இடமாக நம்மை நிலைநிறுத்துவது நமது பார்வை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு வெற்றிகரமாக நடத்தியது. அந்த மதிப்புமிக்க போட்டியை நான்கு மாதங்களுக்குள் நாங்கள் ஏற்பாடு செய்தோம், அதற்கு வழக்கமாக ஒரு வருடம் ஆகும்.
சமீபத்தில், ஸ்குவாஷ் உலகக் கோப்பை - 2023 சென்னையில் ரூ.2 கோடி செலவில் நடத்தினோம். 2023 ஆகஸ்ட் மாதம் விளையாட்டுத் துறைக்கு முக்கியமான மாதமாக இருக்கும். ஆசிய கோப்பை ஹாக்கி 2023 ஆகஸ்ட் 3 முதல் 11 வரை 18 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறவுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கு நடைபெறும் முதல் சர்வதேச ஹாக்கிப் போட்டி இதுவாகும். நாங்கள் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக்கை நடத்தவுள்ளோம். இது இந்தியாவின் முதல் சர்வதேச சர்ஃபிங் நிகழ்வு ஆகும். இந்த விளையாட்டுக்காக மாநிலம் ரூ.2.67 கோடியை அனுமதித்துள்ளது.
மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு விளையாட்டுக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 2023-24 பட்ஜெட்டில் சென்னை மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதிநவீன "உலகளாவிய விளையாட்டு நகரத்தை" உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம். மைதான வசதிகள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மினி-ஸ்டேடியங்கள் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் சைக்ளோத்தான்: முதன்முறையாக, பாரா-விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பாராஸ்போர்ட்ஸ் அரங்கையும் ஆறு அமைக்கவுள்ளோம். மாநிலத்தில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் முதல் முதலீடு இதுவாகும். நமது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தகுதியான வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதோடு, தமிழ்நாட்டில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத்" தொடங்கியுள்ளார்.
எங்களின் பணியின் ஒரு பகுதியாக, எச்.சி.எல் உடன் இணைந்து அரசாங்கம் இந்த சைக்ளோத்தான் நிகழ்வை சென்னையில் நடத்துகிறது. கார்பன் கால்தடத்தைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உங்கள் மன மற்றும் உடல் வலிமையைப் பெருக்கும் நிகழ்வில் பங்கேற்குமாறு அனைவரையும் அழைக்கிறேன். முதலமைச்சர் அவர்களே சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்னைவாசிகள் அடிக்கடி கிழக்கு கடற்கரை சாலையில் அவர் சைக்கிளில் செல்லும் போது அவரை நேரில் பார்த்துள்ளனர்.
3 பிரிவுகளில் சைக்கிள் பந்தயம்: தமிழக அரசு, இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக ஒரு சிறப்பு பாதையை அர்ப்பணித்துள்ளது. சைக்ளோத்தான் மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். முதல் வகை தொழில்முறை வகையை சார்ந்தது. 55 கிலோ மீட்டர் கொண்ட இந்த பந்தயத்தில் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அடுத்து அமெச்சூர் குழுவின் கீழ் எம்டிபி சாலைப் பந்தயம் எனப்படும் மற்றொரு வகை உள்ளது. இது 25 கிலோ மீட்டர் பயணமாக இருக்கும்.

பொதுமக்கள் மற்றும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் பொழுதுபோக்கிற்காக பங்கேற்க விரும்புவோர் பங்கேற்கும் வகையில் 15 கிலோ மீட்டர் பந்தயமும் இடம் பெறுகிறது. இந்த சைக்கிள் பந்தயத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சைக்ளோத்தான் நடத்துவதற்கு ஹெச்.சி.எல்.சென்னையைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications