சென்னை பாஜக மாவட்ட செயலாளர் கைது.. பெண் நிர்வாகியை ஏமாற்றிய வழக்கில் அதிரடி.. பரபரப்பு
சென்னை: சென்னையில் ரயில் நிலையத்தில் கடை வைக்க அனுமதி பெற்று தருவதாக கூறி பாஜகவை சேர்ந்த பெண்ணிடம் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் இரண்டரை லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நேதாஜி நகர் மெயின் தெருவில் வசித்து வருபவர் நவமணி. இவர் பாஜக கட்சியில் செயல்பட்டு வருகிறார். திருமணம் ஆனவர். பாஜகவை சேர்ந்தவர் என்பவர் மாவட்ட செயலாளர் செந்தில் என்பவர் நவமணிக்கு பழக்கம் ஆனார். இந்நிலையில் தான் தனது குடும்ப சூழலை அவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து செந்தில் அவருக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் தன்னிடம் இரண்டரை லட்சம் தந்தால்
ரயில் நிலையத்தில் கடை வைக்க அனுமதி பெற்று தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய நவமணி அவரிடம் கடந்த 2022 ம் ஆண்டு இரண்டரை லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை பெற்று கொண்ட செந்தில், நவமணிக்கு கடை வைக்க அனுமதி பெற்று கொடுக்கவில்லை. இதுபற்றி நவமணி கேட்டதற்கு அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் மனமுடைந்த நவமணி இரண்டரை லட்சம் ரூபாயை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் செந்தில் பணத்தை கொடுக்காமல் அவரை திட்டியும், மிரட்டியும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நவமணி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நவமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் நவமணி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக தகவல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நவமணியிடம் விசாரணை நடத்தினர். அதோடு தற்கொலைக்கு முயற்சிக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் நவமணி தன்னுடைய தற்கொலைக்கு காரணம் செந்தில் தான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீசார் செந்திலை கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை சஞ்சீவி ராயன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் இருந்த செந்திலை போலீசார் கைது செய்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற நவமணி தற்போது சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சென்னை பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications