சென்னை வந்தே பாரத் ரயிலில் வாட்சை தவறவிட்ட பயணி.. புகார் அளித்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
சென்னை: பஸ்களிலோ, ரயில்களிலோ பயணம் செய்யும் போது சில நேரங்களில் தங்களது பொருட்களை தவறவிடுவது உண்டு. அப்படி தவறவிட்ட பொருட்களை மீண்டும் பெறுவது என்பது கடினம். எனினும் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் வந்தே பாரத் ரயிலில் தனது வாட்ச்-ஐ தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக ரயில்வேக்கு அவர் புகார் தெரிவித்த நிலையில், ரயில்வே ஊழியர்கள் மருத்துவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ரயில், பேருந்துகள் என பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது, அடித்துப்பிடித்து ஏறும் பயணிகள், பயணம் முடிந்து போகும் போது சில நேரங்களில் ஏதாவது சில பொருட்களை தவறவிட்டு செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கார் கீ, ஹெட்போன், வாட்ச் என கைக்கு அடக்கமாக உள்ள பொருட்களை தவறவிடுவதே அதிகம் நடக்கக்கூடியதாக உள்ளது.

ரயிலில் தவறவிட்ட வாட்ச்
பயணம் முடிந்து நீண்ட தூரம் சென்ற பிறகுதான் தவறவிட்ட பொருட்கள் சிலருக்கு நினைவுக்கு வருவதுண்டு. அதுபோன்ற தருணத்தில், மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்து ரயிலை கண்டுபிடித்து கோச்சுகளில் தேடினாலும் கூட, தவறவிட்ட பொருட்களை மீண்டும் கண்டுபிடிப்பது என்பது லாட்டரி அதிர்ஷ்டம் போலத்தான். பலருக்கும் இத்தகைய நேரங்களில் தவறவிட்ட பொருட்கள் கிடைக்காது.
ஆனால், சென்னை வந்தே பாரத்தில் பயணி ஒருவர் வாட்சை தவறவிட்டுள்ளார். இது குறித்த புகார் அளித்த சிறிது நேரத்தில் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:
வீட்டுக்கு சென்ற பிறகு தான்
சென்னையை சேர்ந்தவர் மரியானோ அன்டோ புருனோ மஸ்கரென்ஹாஸ். நியூரோசர்ஜன் மருத்துவரான இவர், சென்னை வந்தே பாரத் ரயிலில் நேற்று முன் தினம் பயணம் செய்துள்ளார். எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு ரயில் வந்த நிலையில், வீட்டிற்கு உடனடியாக சென்றுவிட்டார்.
வீட்டிற்கு சென்ற பிறகுதான், ரயிலில் ரெஸ்ட்ரூமிற்கு சென்றபோது வாட்சை அங்கேயே தவறவிட்டது நினைவுக்கு வந்துள்ளது. ரயிலில் இருந்து இறங்கி 40 நிமிடங்கள் ஆன நிலையில், உடனடியாக RailMadad இணையதளத்தில் புகார் அளித்துள்ளார். தனது PNR, கோச் எண், இருக்கை எண் ஆகிய விவரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்கள் செயல்பாட்டால் நெகிழ்ச்சி
மதியம் 12.28 மணிக்கு ரயில் மடாட் இணையதளத்தில் புகார் அளித்த நிலையில், அடுத்த 3 நிமிடங்களில் ரயில்வே உதவி எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. புகாரை உறுதிப்படுத்திய பிறகு, அடுத்த 12.34 மணிக்கு ரயில்வே உதவி எண்ணிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. 12.49 மணிக்கு ரயில்வே போலீஸ் ஒருவர் போன் செய்து, "நீங்கள் வந்த வந்தே பாரத் ரயில் யார்டுக்கு சென்றுவிட்டது, அங்கே பார்க்க சொல்லியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு 1.12 மணிக்கு வாட்ஸ் அப்பில் வாட்ச் புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். அடுத்த ஒரு நிமிடத்தில், "இது உங்களுடையதா?" என்று ரயில்வே போலீசார் கேட்டுள்ளனர். ரயிலில் தவறவிட்ட வாட்சை அடுத்த சில நிமிடங்களில் கண்டுபிடித்து கிடைக்க உதவிய ரயில்வே ஊழியர்களின் செயல்பாட்டால் நெகிழ்ச்சி அடைந்த அந்த மருத்துவர், இதை தனது எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) பகிர்ந்துள்ளார்.
ரயில்வே மீது எந்த தவறும் இல்லை
அந்த மருத்துவர் கூறுகையில், "நேர்மையாக சொல்வது என்றால், ரயில்வே மீது எந்த தவறும் இல்லை. வாட்சை அங்கேயே விட்டுச் செல்வது எனது தவறுதான். தங்கள் மீது எந்த தவறும் இல்லாவிட்டாலும் கூட, 12-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவோடு இரவாக பணியாற்றியிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மறுநாள் காலை தேவையான ஆவணங்களுடன் ரயில் நிலையத்திற்கு சென்ற அந்த மருத்துவர், ஆதார் கார்டு மற்றும் டிக்கெட்டின் நகல் ஆகியவற்றை அளித்து வாட்சை பெற்றுக்கொண்டாராம். தெற்கு ரயில்வே மற்றும் ரயில்வே போலீசாரின் இந்த துரிதமான நடவடிக்கையை பாராட்டி அவர் வெளியிட்ட பதிவு, இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications