ஈசிஆர் மது விருந்து.. ஒரே நைட்டில் 14 லட்சத்தை குவித்த ரிசார்ட்?.. நள்ளிரவில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் விடிய விடிய மது விருந்து நடத்தப்பட்ட நிலையில் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை அமைதியான சூழலில் கடல் அலைகள், கடல் காற்றுடன் மென்மையான சூழலை தரும். இதனால் பெரிய பெரிய பணக்காரர்கள் இந்த பகுதிகளில் பண்ணை வீடுகளையோ பங்களாக்களையோ வாங்கிக் குவிப்பார்கள்.
சென்னையில் வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலங்களில் இந்த ஈசிஆர் வீடுகளில் தங்கள் பொழுதை கழிப்பர். அது மட்டுமல்லாமல் இந்த பகுதிகளில் ஏராளமான ரிசார்டுகள், பொழுதுபோக்கு மையங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

வார இறுதி நாட்கள்
ஆங்கில புத்தாண்டு, வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் இங்குள்ள ரிசார்டுகள் நிரம்பி வழியும். அது போல் இங்கு சில ரிசார்டுகளில் அனுமதியின்றி மது விருந்து நடத்தப்படுவதாகவும் தெரிகிறது. அந்த வகையில் பனையூரில் ஒரு முக்கிய அரசியல் புள்ளிக்கு சொந்தமான ரிசார்ட்டில் நேற்று அதிகாலை மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

50 பெண்கள்.. 500 ஆண்கள்
இந்த சோதனையில் சட்டவிரோதமாக மது விருந்து, ஆடல் பாடலுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாக 50 பெண்கள் உள்பட 700 ஆண்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். விடிய விடிய மது விருந்தில் கலந்து கொண்டதாக பிடிபட்ட அவர்களிடம் பெயர், விலாசம் உள்ளிட்ட தகவல்களை போலீஸார் கேட்டு பெற்றனர். இதனால் அந்த பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சைமன் கைது
இந்த நிகழ்ச்சிக்கு தனியார் நிறுவன மேலாளர் சைமன் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவ, மாணவிகள் என்ற தகவலை கேட்டு போலீஸார் அதிர்ந்தனர். மேலும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் என தெரியவந்தது.

ரூ 10 லட்சம் வசூல்
இந்த கல்லூரி மாணவிகளிடம் ரூ 1500 முதல் ரூ 2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பார்ட்டியை நடத்தியவர் 10 லட்சம் ரூபாய் முதல் 14 லட்சம் ரூபாய் வரை ஒரே நாளில் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரிசார்ட்டில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட் உள்பட பல்வேறு போதை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

எச்சரிக்கை கடிதம்
இதையடுத்து பிடிபட்ட அனைவரையும் எச்சரித்து கடிதம் எழுதி வாங்கிகொண்டு அவர்களை அனுப்பினர். முன்னதாக போலீஸார் வருவதை கண்ட பலர் தங்களது இரு சக்கர வாகனங்கள், கார்களை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என்று அடையாளம் காணும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications