ஃபார்முலா 4: நேத்து சும்மா ட்ரெய்லர்..இன்னிக்கு தான் மெயின் பிக்சரே! மலைக்க வைக்கும் ரேஸ் கார்கள்!
சென்னை: சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் தகுதிச்சுற்று மற்றும் பயிற்சி போட்டிகள் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று பிரதான போட்டிகள் நடைபெறுகிறது. இன்று என்னென்ன போட்டிகள் நடைபெறுகிறது? எவ்வளவு நேரம் நடைபெறும் உள்ளிட்ட தகவல்களை தற்போது பார்க்கலாம்..
தெற்காசியாவில் முதன்முறையாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கியது. பயிற்சி போட்டி மற்றும் தகுதி சுற்று போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் இந்த போட்டி சென்னை தீவுத் திடலை சுற்றியுள்ள 3.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ரேசிங் சர்க்யூட்டில் நடைபெறுகிறது. 19 டர்னிங் பாயிண்ட்களை கொண்ட இந்த சர்க்யூட் கார் ரேஸர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதன் அடிப்படையில் இன்று பிரதான போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த போட்டிகள் இரண்டு போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டியானது மாலை 5.05 மணிக்கு தொடங்குகிறது. ஒரு ரவுண்டு கொண்ட இந்த போட்டி சுமார் 25 நிமிடங்களுக்கு வரை நடைபெறும். 5.35 மணிக்கு போட்டி நிறைவடைகிறது. இதனை அடுத்து ஃபார்முலா 4 இந்தியன் கார் சேம்பியன்ஷிப் இரண்டாவது போட்டி 9.05 மணிக்கு தொடங்கி 9:30 மணிக்கு முடிவடைகிறது.
தொடர்ந்து இந்தியன் ரேசிங் லீக் பந்தயத்தின் முதல் போட்டியானது மாலை 6:05 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 10.5 மணிக்கும் தொடங்குகிறது. இந்த இரு பந்தயங்களும் 30 நிமிடங்களை கொண்டது. இது மட்டுமல்லாமல் ஜேகே டயர் வழங்கும் ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்படுகிறது. ஃபார்முலா போர் கார் இந்தியன் சாம்பியன்ஷிப் கார் ரேஸ் ஆனது சிங்கிள் வீரர்களைக் கொண்டும், இந்தியன் ரேசிங் லீக் போட்டியானது அணிகளாகவும் நடத்தப்படுகிறது.
இந்தியான் ரேசிங் லீக் எனும், சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் 2 வீரர்கள் வீதம் 16 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் இந்திய ரேசிங் லீக் கார் ரேஸில் மொத்தம் உலகம் முழுவதிலும் இருந்து 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒரு அணியில் 4 வீரர்கள் இடம் பெறுவார்கள்.. இந்த போட்டியில் மொத்தமாக 24 வீரர்கள் வரை
இருப்பார்கள். ஆனால் நிச்சயமாக ஒரு வீராங்கனை இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். அப்படி பார்க்கும் போது, ஒரு அணியில் 3 வீரர்கள், 1 வீராங்கனை இருக்க வேண்டும். அதன்படி 18 வீரர்களும், 6 வீராங்கணைகள் என 24 பேர் இந்தியன் ரேசிங் லீக்கில் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் கார்கள் அதிகபட்சம் 240 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக ஃபார்முலா 4 கார் ரேஸில் மைகலா ஃபார்முலா 4 இரண்டாவது தலைமுறை கார்கள் மணிக்கு 210 கிலோமீட்டர் வேகம் வரையும், இந்தியன் ரேசிங் லீக் கார் ரேசில் வோல்ஃப் ரேசிங் தண்டர் ஜிபி08 கார்கள் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications