சொத்து குவிப்பு வழக்கு.. ஓபிஎஸ், கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் விடுதலைக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

Chennai HC adjourns review of DA case against EX CM OPS and DMK Ministers to June

இந்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருந்தார்.

இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில்,
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் வாதத்துக்காக வழக்கு இன்று தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் ஏழாம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+