சட்டசபை உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு.. தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் சட்டசபை உறுப்பினராக வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனை விட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அந்த தொகுதியில் கடந்த முறை 2ஆவது இடம் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிட்டார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது காலை முதல் மயூரா ஜெயக்குமார் முதலிடத்தில் இருந்து வந்தார்.

கமல்ஹாசன்
இதையடுத்து வானதி சீனிவாசனும் கமல்ஹாசனும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் நடந்த இந்த ட்விஸ்ட்டால் வானதி 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கமல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் கமல், வானதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.

கோவை தொகுதி
இந்த நிலையில் கோவை தொகுதியில் போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டல தலைவரான கே.ராகுல் காந்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற வானதி சீனிவாசன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதாகவும், தனக்கு 73 வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகம்
தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக எதிர்ப்பலை நிலவிய சூழலில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புவதாக மனுவில் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்துதான் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென மே 3-ஆம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

தேர்தல் ஆணையம்
எனவே தனது மனுவை பரிசீலித்து, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன் தேர்தல் வழக்கில் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications