சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நில அபகரிப்பு வழக்கு ரத்து.. அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்.. ஜெயக்குமார் ஹேப்பியோ ஹேப்பி!

Google Oneindia Tamil News

சென்னை : நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

இதில், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து ஜெயக்குமார், அவரது மகள், மருமகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆயுத பூஜை கொண்டாட்டம்: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் ஆயுத பூஜை கொண்டாட்டம்: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஜெயக்குமார் மருமகன்

ஜெயக்குமார் மருமகன்

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார். அவரது மகள் ஜெயப்ரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

 2016- 2021

2016- 2021

இந்த மனுவில், அந்த வழக்கு மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும், 2016ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு 2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 வழக்கு ரத்து

வழக்கு ரத்து

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், ஜெயக்குமார் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். இதன் மூலம், தன்னைச் சுற்றியிருந்த இந்த வழக்குச் சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளார் ஜெயக்குமார்.

English summary
Chennai High Court today quashed the case filed against former AIADMK minister Jayakumar, his daughter and son-in-law in the land grabbing complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X