சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஹைகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று.. மூடப்பட்டது ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஹைகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை ஹைகோர்ட் மூடப்பட்டுவிட்டது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசர வழக்குகள் மட்டும் காணொலி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை ஹைகோர்ட்டில் 2 டிவிஷன் பெஞ்ச், ஒரு நீதிபதி கொண்ட 5 அமர்வுகள் என்று மொத்தம் 7 அமர்வுகள் மட்டும் அவசர வழக்குகளை விசாரித்து வந்தன. உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்

காணொலி காட்சி

காணொலி காட்சி

கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை, கடந்த 1ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாரத்திற்கு 2 நாட்கள் என்ற வீதம் பணியாற்றினர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கோர்ட்டுக்கு வந்து அறையில் இருந்தபடியே காணொலி மூலம் விசாரணை நடத்தினர்.

33 அமர்வுகள்

33 அமர்வுகள்

இது போல் மொத்தம் 33 அமர்வுகள் செயல்பட்டன. இந்த நிலையில் ஹைகோர்ட் துணை பதிவாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் பணியாற்றிய பிரிவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஹைகோர்ட் நீதிபதிகள் சிலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து அவர்கள் தங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து சென்னை ஹைகோர்ட் மூடப்பட்டுவிட்டது. அவசர வழக்குகள் மட்டும் வரும் 30-ஆம் தேதி வரை காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஹைகோர்ட்டு மற்றும் ஹைகோர்ட்டு மதுரை கிளையில் தற்போது வழக்குகள் விசாரிக்கும் முறை குறித்து ஹைகோர்ட்டு நிர்வாகக்குழுவில் நீதிபதிகள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலவும் நிலை குறித்து அரசு வெளியிடும் அறிக்கைகள், பத்திரிகைகளில் வரும் செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவுவது தெரிகிறது. எனவே, சென்னையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. ஹைகோர்ட்டின் பணி மேற்கொள்ளும் முறையை மறுஆய்வு செய்ய வேண்டியதுள்ளது என்று நிர்வாக குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

மதுரை கிளை

மதுரை கிளை

இதன்படி, ஹைகோர்ட்டில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு பதில், அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் சென்னை ஹைகோர்ட்டு மற்றும் ஹைகோர்ட்டு மதுரை கிளையில் விசாரிக்க வேண்டும் என்று நிர்வாக குழு கூட்டத்தில் நீதிபதிகள் முடிவு செய்தனர்.

வழக்குகள்

வழக்குகள்

இதன்படி, சென்னை ஹைகோர்ட்டில் 2 நீதிபதிகள் கொண்ட இரு டிவிசன் பெஞ்சுகள், ஒரு நீதிபதி கொண்ட 4 அமர்வுகள் என்று மொத்தம் 6 அமர்வுகள் அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்கும். இதேபோல், ஐகோர்ட்டு மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்ச், ஒரு நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்று மொத்தம் 4 அமர்வுகள் அவசர வழக்குகளை காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கும். சுழற்சி முறையில் பணி ஒதுக்கப்படும் நீதிபதிகள் ஹைகோர்ட்டுக்கு வராமல், தங்களது வீடுகளில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த நிலை வருகிற 30-ஆம் தேதி வரை நீடிக்கும்.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டங்களில் நீதிபதிகள் கோர்ட்டுக்கு வந்து வழக்குகளை விசாரிக்கின்றனர். இந்த நடைமுறை உள்ள அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில், மாவட்ட தலைநகர் மற்றும் தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் வழக்கமான முறையில் நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்படலாம். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் மட்டும் செயல்படலாம்.

கிருமிநாசினி

கிருமிநாசினி

இதற்காக நீதிமன்றங்களை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது பிரச்சினை இருந்தால், சென்னை ஹைகோர்ட்டுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்
    வழக்கு விசாரணை

    வழக்கு விசாரணை

    சென்னை ஹைகோர்ட்டில் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்சும், மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட மற்றொரு டிவிசன் பெஞ்சும், டிவிசன் பெஞ்ச் விசாரிக்கும் வழக்குகளை விசாரிப்பார்கள்.

    விசாரணை

    விசாரணை

    இதேபோல், ரிட் வழக்குகளை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், சிவில் வழக்குகளை நீதிபதி எம்.சுந்தர், ஜாமீன் வழக்குகளை நீதிபதி எம்.நிர்மல்குமார், பிற வகை கிரிமினல் வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    English summary
    Chennai High Court closed after 3 judges found corona positive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X