தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் மீதான நிலுவை வழக்கு எவ்வளவு? அரசுக்கு சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு ஏப்ரல் வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கு சிறப்பு நீதிமன்றம் உள்பட பிற நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தான் தமிழக எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீது சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த முறை இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நிசார் அஹமது, சில மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆஜராகியுள்ளதால், நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட இயலாது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவருக்கு பதிலாக, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை நீதிமன்றத்துக்கு உதவியாக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளின் விவரங்களை சேகரித்துள்ளதாகவும், மற்ற வழக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் தங்களுக்கு வழக்குகளின் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications