கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு நிலங்களை அரசு பயன்படுத்திக் கொள்ள ஹைகோர்ட் அனுமதி
சென்னை: கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் அரசின் 97 மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிப்காட் தொழில் பூங்கா, ஐடி பூங்கா, சட்டக் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி, விளையாட்டு திடல், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாக அலுவலகம் ஆகியவைகளுக்கு நிலம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவோ? பட்டா மாறுதல் செய்யவோ? தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், பி.டி ஆதிகேசவலு அமர்வு, மேய்ச்சல் நிலங்களை மாற்ற அரசுக்கோ? மூன்றாம் நபருக்கோ? அதிகாரம் இல்லை. நிலத்தை மாற்றுவதாக இருந்தால் கால்நடை மேய்ச்சலுக்கான மாற்று நிலத்தை கண்டறிந்த பின்னரே மாற்ற முடியும். நில ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வருவாய்த் துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தகுந்த மாற்று இடம் வழங்கப்பட்ட பின்னர் தமிழ்நாடு அரசு 97 மக்கள் நலத் திட்டங்களுக்காக நிலங்கள் எடுக்கப்படும் எனவும், அதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் மாற்று இடம் கண்டறியப்பட்ட பின் புறம்போக்கு நிலங்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
அரசின் உத்தரவாதத்தை ஏற்று மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மக்கள் நலத்திட்டங்களுக்கு உபயோகப்படுத்தலாம். மாற்று நிலம் ஒதுக்காமல் பட்டா மாற்றம் செய்ய கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications