சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை! பார்வையிழந்தவருக்கு ரூ 5 லட்சம் வழங்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கண்பார்வை பறிபோனவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. போரட்டத்தை போலீசார் கலைத்தபோது வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி ரோட்டரி நகரைச் சேர்ந்த விமலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் ஜல்லிக்கட்டு போரட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை தாக்கியதில் தனது மகன் கார்த்திக்கின் இடது கண் பாதித்து பார்வை பறிபோனதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்தில் புகார் அளித்தாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர் சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பார்வை பறிபோன தனது மகனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி காவல்துறையால் தாக்கப்பட்டதில் பார்வை பறிபோனதற்கான மருத்துவ ஆவணங்கள் உள்ளதாகவும், இழப்பீடு வழங்குவது அரசின் கடமை என்றும் வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், போராட்டக்காரர்கள் வீசிய கற்களால் தான் கண் பார்வை பறிபோனதாக வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பார்வை பறிபோன இளைஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 12 வாரங்களில் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications