சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை! அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிரான ஆவணங்களை வழங்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை தொகுதி வாக்காளருக்கு வழங்க, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விடுதலை செய்து, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து புலன் விசாரணை அமைப்பு மேல் முறையீடு செய்யாததால், தொகுதி வாக்காளர் என்ற முறையில் மேல் முறையீடு செய்வதற்காக, வழக்கின் முதல் தகவல் அறிக்கை, சாட்சியங்கள், தீர்ப்பு உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், வழக்கில் சம்பந்தப்பட்டவராகவோ, பாதிக்கப்பட்டவராகவோ இல்லை எனக் கூறி, அமைச்சருக்கு எதிரான வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி சண்முகசுந்தரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தொகுதி வாக்காளர் என்ற முறையில் மக்கள் பிரதிநிதி மீதான வழக்கின் தீர்ப்பு விவரங்களை தெரிந்து கொள்ள மனுதாரருக்கு உரிமை உள்ளது. விசாரணை அமைப்புகள் மேல் முறையீடு செய்ய வேண்டாம் என முடிவெடுத்தால், வாக்காளர் என்ற முறையில் மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம்.
அதற்காக தீர்ப்பு உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்க கூடாது. வழக்கு ஆவணங்கள் கோரி மனுதாரர் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிய கட்டணங்களை செலுத்தக் கூறி, ஆவணங்களின் நகல்களை 15 நாட்களில் வழங்க வேண்டும் என, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications