Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பால் கனகராஜ் வர்றாரா.. சென்னை ஹைகோர்ட்டில் அதே "பாஜக புயல்"? இவ்ளோ சிக்கல் இருக்கே: இன்று க்ளைமேக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைகோர்ட்டில் 100 வருடங்களுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கம் திகழ்ந்து வருகிறது. இந்த சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கடந்த 2016 நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரபட்டன. எனவே, இந்த 4 வருடங்களாகவே தேர்தல் நடக்கவில்லை.. தள்ளிப்போய் கொண்டே இருந்தது..

Chennai high court advocates association election and Who is this RC Paul Kanagaraj

என்ன காரணம்: கடைசியாக 2016 -ல் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2018ம் ஆண்டு தேர்தல் நடந்த வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்துதான், கேஸ் போடப்பட்டது.. இதற்கு பிறகு, தேர்தலுக்கு ஹைகோர்ட் தடை விதித்துவிட்டது.

எனவே, இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.. தேர்தலை நடத்த மூத்த வழக்கறிஞர் கபீரை தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். ஜனவரி 9-ம் தேதி தேர்தலும் நடைபெற்றது. ஆனால், தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடியில் திடீர் களேபரம் நடந்துவிட்டது.

வாக்குச்சாவடி: வாக்கு சீட்டை சிலர் மொத்தமாக அள்ளி சென்றுவிட்டதாக தகவல் பரவிவிட்டது. எனவே, வழக்கறிஞர்கள் சிலர் வாக்குசாவடியில் தகராறு செய்யவும், அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை சிலர் அடித்து நொறுக்கவும், அன்றைய தினம் பெரும் பதற்றம் நிலவியது அதனால், தேதி குறிப்பிடப்பிடாமல் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

எனவே, தேர்தலை நடத்த வேண்டும் என்று, வழக்கறிஞர்கள் சத்தியபால், எம்.வேல்முருகன், ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர்..

இதைதொடர்ந்து நீதிபதிகள் தேர்தல் நடத்தும் குழுவிடம் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கருத்தை கேட்டதுடன், இது தொடர்பான விசாரணையும் நடந்து வந்தது.. இறுதியில், டிசம்பர் 15ம் தேதி வழக்கறிஞர்கள் சங்க நூலக கட்டிடத்திலேயே தேர்தலை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று தேர்தல்: இந்நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.. மொத்தம் 4,752 வழக்கறிஞர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க போகிறார்கள்.. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தலைவர்பதவிக்கு ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.சி.பால்கனகராஜ், எம்.வேல்முருகன், சத்தியபால் உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகின்றனர். துணைத்தலைவர் பதவிக்கு அப்துல்ரஹ்மான், அறிவழகன், கோபால், முரளி உள்ளிட்ட 8 பேரும், செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார், காமராஜ் உள்ளிட்ட 10 பேரும் போட்டியிடுகின்றனர்.பொருளாளர் பதவிக்கு ராஜேஷ், ஆனந்த் ஆகிய 9 பேர் போட்டியில் உள்ளனர்.

நூலகர் பதவிக்கு ரகு, விஜயராஜ், போத்ராஜ் உள்ளிட்ட 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிடுகின்றனர்.

பாதுகாப்பு: தேர்தலை சுமுகமாக நடத்துவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையும், மாநில காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது... இன்று மாலை 5 மணி வரை வாக்குகள் செலுத்தப்பட உள்ளன.. இந்த வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை www. mhaa.in என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இன்று நடைபெறும் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. காரணம், சென்னை ஹைகோர்ட் நீதிபதிகளை பொறுத்தவரை, நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்..

முக்கியமாக, "வழக்கறிஞர் Vs போலீஸ்" இவர்களிடையே அடிக்கடி எழும் மோதல்கள், ஆன்லைன் விசாரணை முறையில் நிலவும் குறைபாடுகள், ஆன்லைன் வழக்கு தாக்கல் செய்வதில் பிரச்சனைகள், நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படாதது, கார் பார்க்கிங், வெளிமாநில நீதிபதிகள் இங்கு இடமாற்றம் செய்வதை எதிர்க்காதது, இளம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படாதது, உத்தரவு, தீர்ப்புகளை நகல்களை பெறுவதில் தாமதம், வழக்கை பட்டியலிடுவதில் உள்ள சிக்கல் என ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

சிக்கல்கள்: இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், இதற்கெல்லாம் யாரும் பெரிதாக குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கமும் வழக்கறிஞர்கள் மத்தியில் வலுவாக உள்ளது.. அதுமட்டுமல்ல, வழக்கம்போலவே, இந்த முறை தேர்தலிலும், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது பால்கனகராஜ் மற்றும் வேல்முருகன் ஆவர்.

ஆர்.சி.பால்கனகராஜை பொறுத்தவரை, முன்னாள் தலைவர் ஆவார்.. பார் கவுன்சில் உறுப்பினரும்கூட.. அதைவிட முக்கியமாக பாஜகவின் சட்டப்பிரிவு செயலாளராக உள்ளவர்.. எனவே, இவருக்கு பிற கட்சியின் ஆதரவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

அதேபோல, பார்கவுன்சில் உறுப்பினரான எம்.வேல்முருகன், வழக்கறிஞர்களின் பிரச்சனைக்காக, பார்கவுன்சில் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுடன், அனைத்து போரட்டங்களிலும் கலந்து கொண்டு குரல் கொடுப்பவர்.. எனவே, இன்றைய தேர்தல் இவர்கள் 2 பேரில் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோடி ஆட்சி: கடந்த 2020-ல் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டவர் பால்கனகராஜ்.. அந்த இணைப்பு விழாவில் பேசியபோது, "பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்... நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி" என்று பால்கனகராஜ் புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+