“விளம்பரம்”.. 76 புத்தகங்களை நீங்க படிச்சீங்களா? சவுக்கு சங்கர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கேள்வி
கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: கடலூர் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் விளம்பர நோக்கத்துடன் மனு தாக்கல் செய்ததாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிறைவாசிகளுக்கு வழங்கும் 76 புத்தகங்களையும் நீங்கள் படித்து உள்ளீர்களா எனவும் சவுக்கு சங்கரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் அரசு அதிகாரியான சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல் நேர்காணல்களில் அரசியல், சட்டம் ஒழுங்கு சார்ந்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வெளிப்படையாக இவர் தெரிவித்து வரும் கருத்துக்களால் இவரது பேச்சுக்களுக்கு மக்கள் வரவேற்பும் கிடைத்தது.
பாரதிய ஜனதா கட்சி, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை இவர் தெரிவித்து வந்தார். சமீப காலமாக திமுக மீதும் தமிழ்நாடு அரசு மீதும் இவர் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக கூறப்படுகிறது.

மாரிதாஸ் கருத்து
இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து "திமுக ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா?" என்று கேள்வி எழுப்பி சர்ச்சைக்குரிய பதிவை பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்டார்.

வழக்கு தள்ளுபடி
அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தார். இதனை சுட்டிக்காட்டிய சவுக்கு சங்கர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது யூடியூப் சேனலில் குற்றம்சாட்டினார்.

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு
இதனை அடுத்து அவர் மீது உயர்நீதிமன்ற மதுரை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. நீதிபதி சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் வழக்கு
இந்த நிலையில் கடலூர் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக புத்தகங்களை வழங்க அனுமதி கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினேன்.

புத்தகங்களை வழங்க வேண்டும்
ஆனால் அரசியல் காரணங்களால் தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை மறுத்து விட்டதாகவும் மனுவில் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு தள்ளுபடி
அப்போது நீதிபதி, "இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? கைதிகளின் வாழ்க்கைக்கு இந்த புத்தகங்கள் உதவும் என எவ்வாறு கூறுகிறீர்கள்." என கேள்வி எழுப்பினார்.விளம்பர நோக்கத்திற்காக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன் புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications