சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

50 வருஷம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க! அறநிலையத்துறை தூங்கிட்டு இருக்காங்க! குட்டு வைத்த நீதிமன்றம்!

Google Oneindia Tamil News

சென்னை : கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சீனிவாசன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அர்ச்சகர்கள் நியமன அறிவிப்பை எதிர்த்த வழக்குகள்! முடித்து வைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர்கள் நியமன அறிவிப்பை எதிர்த்த வழக்குகள்! முடித்து வைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

அறநிலையத்துறை வழக்கு

அறநிலையத்துறை வழக்கு

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பான கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். மேலும், தமிழகத்தில் தற்போது வரை 1100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

நீதிமன்றம் கேள்வி

நீதிமன்றம் கேள்வி

இதை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவில் நிலங்களில் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாக, வழக்குகள் தொடரப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத்துறை அதிகாரி என்னதான் செய்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்,

ஆக்கிரமிப்பு நிலங்கள்

ஆக்கிரமிப்பு நிலங்கள்

ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்றம் உத்தரவு போட்டதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் செயல்படுவது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார். வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

50 ஆண்டு என்ன செய்தீர்கள்?

50 ஆண்டு என்ன செய்தீர்கள்?

50 ஆண்டுகாலமாக உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், இப்பொழுது வந்து கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர். கோவில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத்துறைக்கு பயன் என்பதால் தான், கோவில் நிலங்களை குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.

English summary
Chennai High Court has expressed dissatisfaction with Department of hindu religious The Chennai High Court has expressed dissatisfaction that the Department of hindu religious and charitable endowments, which is supposed to prevent encroachments on temple lands, is asleep without taking any action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X