Kadagam Rasi Palan: கடக ராசிக்கு சிக்கல்கள் எல்லாம் தீரப்போகுது.. பேச்சில் தான் கண்டமே
Kadagam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது நன்மை பயக்கும். சந்தோஷம், அனுகூலம் காணப்படும். புதிய நண்பர்கள், புதிய சூழ்நிலை உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும் காலகட்டம். லாபங்கள் உண்டாகும். தொழில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.
ஆரோக்கியம்
பிள்ளைகள், துணை விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிற மொழி பேசும் நபர்களால் அதிகளவில் ஆதாயம் ஏற்படும். எப்போதும் உங்களுக்காக இருப்பவர்களுக்கு உதவிகள் செய்வது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், கொழுப்பு, முதுகு தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
பேச்சு, வாக்கு தவறுவது, ரகசியங்களை நீங்களே வெளியில் சொல்வது போன்ற நிலைமை ஏற்படும். குடும்பத்தில் உறவினர்களிடம் பேசம்போது கவனமாக இருக்க வேண்டும். பணத்திற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது. சொத்துகள் சேரக்கூடிய நல்ல காலகட்டம். முதலீடுகளை செய்வீர்கள். வீடு, நிலம், மனையை விற்று பணமாக மாற்றும் அமைப்பு உள்ளது.
தொழிலில் ஏற்றம்
லோன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நண்பர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை, நண்பர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் வரும் அமைப்புள்ளது. மூத்த அண்ணன், அக்கா இருந்தால் அவர்களால் உங்களுக்கு பிரச்சனை போன்றவை வரும் கவனம் தேவை. தொழில் ஸ்தானம் நன்றாக இருப்பதால் அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
தொழில் ரீதியாக அற்புதங்கள் காணப்படும். உத்தியோகம் ரீதியான நல்ல விஷயங்கள் நடக்கும். எந்தவிதமான பயணங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நலலது. சமூகத்தில் இருக்கும் பெரிய மனிதர்களை சந்திக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். சுபகாரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ராகவேந்திரரை வழிபாடு செய்வது அனுகூலத்தைத் தரும்.
-
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications