Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்த அடி.. சிவி சண்முகம் வசம் செல்லும் அதிமுக அலுவலக பொருட்கள், ஆவணங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு ஜூலை 11ல் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறையில் ஓ பன்னீர் செல்வம் அணியினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அதிமுக அமைப்பு செயலாளர் சிவி சண்முகத்திடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை.

Chennai High Court order to Police and says handed over the things of ADMK office to CV Shanmugam

இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதிமுக அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

முன்னதாக சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு நடந்தது. இந்த வேளையில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மோதல் வன்முறையானது.

Chennai High Court order to Police and says handed over the things of ADMK office to CV Shanmugam

இதையடுத்து அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், பொருட்களை ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் எடுத்து சென்றனர். இதுபற்றி அதிமுக அமைப்பு செயலாளர் சிவி சண்முகம் சென்னை ராயப்பேட்டை போலீசாரில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ பன்னீர் செல்வம் எடுத்து சென்ற பொருட்கள், ஆவணங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொருட்களை எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் தான் இந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சிவி சண்முகம் மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதாவது இந்த பொருட்களை எல்லாம் கேட்ட அதிமுக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக, அலுவலகத்தை அதிகாரிக்ள் சீல் வைத்து சாவியை எடுத்துச் சென்று விட்டனர். அதை கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே, இந்த பொருட்களை எல்லாம் எங்களிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Chennai High Court order to Police and says handed over the things of ADMK office to CV Shanmugam

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்தியலிங்கத்தால் மனு தாக்கல் செய்யபட்டாது. இந்த மனுக்களை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த பொருட்களுக்கு எல்லாம் யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது. அதனால், இருவரது மனுக்களும் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிவி சண்முகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதரார் சார்பாக மூத்த வழக்கில் ஜான் சத்தியன், முகமது ரியாஸ் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் உத்தரவை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சைதாப்பேட்டை நீதிமன்றம் எங்கள் தரப்பிற்கு ஆவணங்கள் மற்றும் பொருள்களை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது என வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தற்போது இந்த பொருட்களும் அவர் வசம் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+