Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் வழக்கு.. ஹைகோர்ட் வைத்த குட்டு.. சீல் வைக்க அதிகாரம் இல்லை.. ஒப்புக்கொண்ட அமலாக்கத்துறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு அதிகாரம் கிடையாது என்று அமலாக்கத்துறை ஒப்புக் கொண்டுள்ளது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்த நிலையில், சீல் வைப்பது தொடர்பான நோட்டீஸை திரும்ப பெற்று கொள்வதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் தீர்ப்பை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது. இதன்பின் தொடர்ந்து ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதன்பின் இருவரின் வீடுகளுக்கும் சீல் வைத்து சென்றனர்.

Chennai High Court Questions ED Over Basis for TASMAC Case Probe Against Akash Bhaskaran and Vikram Ravindran

சென்னை ஐகோர்ட் கேள்வி

இந்த நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்‌ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எதனடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பினர்.

ஆவணங்கள் எங்கே?

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் நேற்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் உள்ள தகவல்கள் அறிக்கையாக உள்ளதே தவிர, போதுமானதாக இல்லை. ஆவணங்கள் எங்கே? வீட்டில் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள். இதன்பின் அமலாக்கத்துறை கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அமலாக்கத்துறை வாதம்

இந்த நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக யார் மீது சந்தேகம் வந்தாலும், அங்கு சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

வாதமும், ஆவணங்களும்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களுக்கும், வாதங்களுக்கும் பொருந்தவில்லை.41 எஃப்ஐஆர்-களில் இவர்களின் பெயர்கள் உள்ளதா என்ற கேள்வி எழுப்பிய போது, அமலாக்கத்துறை தரப்பில் அது தேவையில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இதன்பின் நீதிபதிகள், சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்ப, அமலாக்கத்துறை நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை.

முக்கிய உத்தரவு

பின், சீலை அகற்றிவிடுகிறோம். நோட்டீஸை எடுத்துவிடுகிறோம் என்று பதில் அளித்தனர். இதனை சீல் வைப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது என்று மனுதாரர்கள் கேட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக பிற்பகல் 2.30 மணிக்கு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக அறிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

ஒப்புக்கொண்ட அமலாக்கத்துறை

இந்த நிலையில் வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு அதிகாரம் கிடையாது என்று அமலாக்கத்துறை ஒப்புக் கொண்டது. இதன் காரணமாக சீல் வைப்பதற்காக அளிக்கப்பட்ட நோட்டீஸை திரும்ப பெற்று கொள்வதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் தீர்ப்பை 4 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதேபோல் அமலாக்கத்துறை தரப்பில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+