கட்சி தாவ தயாரான 40 எம்.எல்.ஏ.க்கள்? அப்பாவு அவதூறு பரப்பிட்டார்! சுப்ரீம் கோர்ட்டுக்கு போன அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவதூறாக பேசியதாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் முருகவேல் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், அதிமுக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமாக இருந்த ஜெயலலிதா இறந்த நேரத்தில் திமுகவுக்கு வர 40 எம்எல்ஏக்கள் தயாராக இருந்ததாக பேசியிருந்தார்.

speaker appavu aiadmk supreme court

இவரது பேச்சு அதிமுகவினர் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், சபாநாயகர் அப்பவுக்கு எதிராக எம்பி., எம்எல்ஏ.களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சபாநாயகர் அப்பாவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் 17ம் தேதி நடைபெற்றது. அப்பாவு தரப்பில் ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், "ஒரு கட்சியின் மீது அவதூறு பரப்பப்படுவதாக அக்கட்சி நினைத்ததால், கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர்தான் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியும். ஆனால் வழக்கில் சம்பந்தமே இல்லாமல் பாபு முருகவேல் இங்கு வழக்கு தொடுத்திருக்கிறார்" என்று வாதாடினார்.

இதனையடுத்து, அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது. 40 எம்எல்ஏக்களில் எவரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கூறக்கூடாது, அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்தது, எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுக-வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? என பாபு முருகவேலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அப்பாவுக்கு எதிராக பாபு முருகவேல் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை, அது மட்டும் அல்லாமல் அதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவ தயாராக இருந்தார்கள் என்ற தவறான தகவலை சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிமுகவுக்கு அவதூறு ஏற்பட்டது உண்மைதான். எனவே சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என பாபு முருகவேல் தரப்பில் ராஜேஷ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+