Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தான விடுதலை.. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆருக்கு சிக்கல்.. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமானத்தை மீறி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் அவரது விடுதலையை ரத்து செய்தார். மேலும் சாட்சி விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். இத்தகைய சூழலில் தான் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எப்படி சொத்து குவிப்பு வழக்கில் சிக்கினார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

அதிமுகவில் செயல்பட்டு வந்தவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். அதன்பிறகு திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

chennai high court kkssr ramachandran dmk

அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடம் மீட்புத்துறை அமைச்சராக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செயல்பட்டு வருகிறார். இவர் இதற்கு முன்பு மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2006-2011ல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது கருணாநிதி அமைச்சரவையில் அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சியை இழந்த நிலையில் அதிமுக அரியணை ஏறியது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

இந்த வேளையில் முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சர்களாக செயல்பட்டவர்களின் மீது சொத்து குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் சிக்கிய ஒருவர் தான் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். 2006-2011 காலக்கட்டத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தனது வருமானத்தை மீறி ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 2011ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த சொத்து குவிப்பு வழக்கில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனைவியுடன் சேர்த்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார். இந்த உத்தரவு என்பது 2002ம் ஆண்டு இறுதியில் வெளியானது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து அந்த வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்க தொடங்கினார்.

இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கு மறுஆய்வை எதிர்த்து அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில் கீழ்கோர்ட்டில் முடிந்த வழக்கை யாரும் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அப்போது அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி இருந்தார். அவர் வாதம் வைக்கும்போது "முடித்து வைக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் இதுபோன்ற உத்தரவை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பிறப்பித்துள்ளார். ஆகவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால் விசாரணைக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் தரப்பு வாதங்கள் ஏற்கனவே முடிந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் தான் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவு ரத்து செய்தார். மேலும் வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை துவங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவும் பிறப்பித்தார். மேலும் விசாரணைக்கு ஆகஸ்ட் 9 ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதன்பிறகு தினமும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனால் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+