சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு.. முழு லிஸ்ட்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்று கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்வானவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் கூட தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

கடந்த நான்கரை ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் அதே நிர்வாகிகள் விதிகளுக்கு முரணாக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த செப் 27ம் தேதி நடைப்பெற்றது.இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது அதில், சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக என்எஸ் ரேவதி தேர்வானார்.

துணை தலைவராக ராஜலட்சுமியும், செயலாளராக பர்வீன், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கினார். புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்று கொண்டனர்.

இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்க உள்ளனர். என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications