மே 1, 2 ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்த ஹைகோர்ட் பரிந்துரை
சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய இரு தேதிகளிலும் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
Recommended Video
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை மே 2ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை குறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, கொரோனா பாதிப்பால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம் என்றும் மே 2ம் தேதி நள்ளிரவுக்குள் அனைத்து தொகுதிகளிலும் முடிவை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

ஏப்ரல் 30
இதனிடையே, மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், ஞாயிற்றுக் கிழமை ஊரடங்குக்கான உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரையிலேயே போடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
மே 2ம் தேதி மட்டும் ஊரடங்கு இருக்காது என தெரிவித்திருந்தது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின் போது மக்கள் கூடுவதை தவிர்க்க அன்றைய தினம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

ஹைகோர்ட் பரிந்துரை
இந்த நிலையில், மே 1, 2ம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பணி தொடர்பான வாகனங்களை மட்டும் இரண்டு நாட்களில் அனுமதிக்கலாம் என்றும் மக்கள் பாதிக்காதவாறு முழு ஊரடங்கு அறிவிப்பை ஏப்ரல் 28ல் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு
வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அரசுக்கு இந்த பரிந்துரையை வழங்குவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications