சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள்
சென்னை: சென்னையில் பெரும்பாலான ஓட்டல்கள் அடுத்தடுத்து வரிசையாக மூடப்பட்டு வருகின்றன.. இதனால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.. சென்னையில் இன்று காலை வணிக சிலிண்டர்கள் 3700 வரை சென்றது. அப்படி கொடுத்தும் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.. சென்னையில் எல்லா இடங்களிலும் மக்கள் சிலிண்டர் இல்லாமல், வீடுகளில் சிலிண்டர் வாங்க முடியாமல் அல்லாடுகிறார்கள். அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் பொதுமக்கள்.
மேற்கு ஆசியாவில் போர் காரணமாக எரிவாயு விநியோகம் தடை பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை... ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அரசு சிலிண்டர் முன்பதிவுக்கு 25 நாட்கள் ஆகும் என்று அறிவித்துள்ளதால், மக்கள் சிலிண்டர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளார்கள்.. பல்வேறு பெரிய ஓட்டல்களில் நேற்று சிலிண்டர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்று சிறிய ஓட்டல்கள் கூட சிலிண்டர்கள் இல்லாமல் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன.

ஓட்டல்களை நம்பியுள்ள பேச்சுலர்கள் உணவு கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். பெருங்குடி, வேளச்சேரி, தரமணி, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வடபழனி, அசோக் நகர், அண்ணா நகர், கோயம்பேடு, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் சுத்தமாக இல்லை. அதிக விலை கொடுத்தாவது வாங்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை.. பெரிய கடைகள் சில மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துள்ளன. சின்ன சின்ன ஓட்டல்கள் சுத்தமாக சிலிண்டர்கள் கிடைக்காமல் அப்படியே மூடப்பட்டு வருகின்றன.
நாளைக்குள் நிலைமை சரியாகாமல் போனால், சாப்பாடு விநியோகமே இல்லாமல் மக்கள் பரிதவித்து போகும் நிலை ஏற்படும். ஓட்டல்களில் பிரச்சனை ஒருபுறம் எனில், வீடுகளுக்கும் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். காத்திருப்பு காலம் 25 நாடகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கலாம் என்று மக்கள் தேடி அலைகிறார்கள்.
ஆனாலும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடைக்கவில்லை.. சென்னை மக்கள் சிலிண்டர் இல்லாமல் அத்தியாவசியமான உணவுக்கு கூட கிடைக்காமல் அல்லாடும் நிலையில், அரசு உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வெகு சில கடைகள் மட்டும் தான் இன்னமும் இயங்குகின்றன. மத்திய அரசும், மாநில அரசும் போக்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications