சீன அதிபர் வருகை.. சென்னை ஒஎம்ஆர் சாலையில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை?
Recommended Video
சென்னை: சீன அதிபர் - மோடி சந்திப்பு எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஒஎம்ஆர் சாலை பகுதியில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பல பள்ளிகளுக்கு வாய்மொழியாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மகாபலிபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும் அக்டோபர் 11-13ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். இதற்காக 11ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும், பிரதமர் மோடியும் சென்னைக்கு வருகிறார்கள்.

தங்குபவர்களின் விவரம்
இதன் காரணமாக சென்னை தொடங்கி மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மாமல்லபுரமும் புதிய சாலைகளால் ரம்மியாக மாறியுள்ளது.அத்துடன் மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது.

வாகனங்கள் செல்ல தடை
இந்நிலையில் சீன அதிபரின் வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறு நாள் (அக்டோபர் 11,12ஆம் தேதிகளில்) சென்னையில் முக்கிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலை மற்றும் மகாபலிபுரம் ஓஎம்ஆர் சாலையில்போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பு வரவில்லை
இதன் காரணமாக பள்ளி கல்லூரி பேருந்துகள் செல்வதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதா கூறி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் பள்ளி க்கல்வித்துறையிடம் இருந்து இதுவரை வெளியாகவில்லை.

ஒஎம்ஆர் சாலையில் விடுமுறை
அதேநேரம் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஒஎம்ஆர் சாலை பகுதியில் பள்ளி. கல்லூரிகளுக்கு பல பள்ளிகளுக்கு வாய்மொழியாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அடையாறு, திருவான்மியூர் பகுதியில் நிறைய பள்ளி கல்லூரிகளுக்கு வாய்மொழியாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாபலிபுரம் விடுமுறை
அதிகாரப்பூரமாக என்றால், மகாபலிபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. இதேபோல் சென்னை ஓஎம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நாளை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறுவுறுத்தியுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications