கடல்லயே இல்லையாம்.. சென்னை, கடலூர் மீனவர்கள் குஷி.. மீன் விலையை பாருங்க.. ஆட்டம் தந்த ஆடி கிருத்திகை
சென்னை: ஆடி கிருத்திகை காரணமாகவும், மீன்கள் வரத்து குறைவு காரணமாகவும், தமிழகம் முழுவதும் மீன்களின் விலையில் தாறுமாறான வித்தியாசம் காணப்பட்டது.
சென்னை காசிமேட்டு துறைமுகத்தை பொறுத்தவரை, வழக்கமாக விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் மீன் வாங்க வருவோர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படும். அதிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடிகாலையிலேயே , மீன்பிரியர்கள் காசிமேட்டுக்கு வர துவங்கிவிடுவார்கள்..

மீனவர்கள்: இதனை கருத்தில்கொண்டே, மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான மீன்களுடன் கரை திரும்புவார்கள்.. அந்தவகையில், கடந்த வாரம்கூட 100 விசைப்படகுகள் அதிகாலையிலேயே, ரகம் ரகமான மீன்களுடன் கரை திரும்பியிருந்தன. ஆனால், நேற்றைய தினம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 60க்கும் குறைவான விசைப்படகுகளே கரை திரும்பின.
இதனால், வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கத்த, நவரை உள்ளிட்ட மீன்கள் வரத்து இருந்தது. ஆனால், குறைந்த அளவே இருந்ததால், விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது... இதனால், நடுத்தர மக்கள், தாங்கள் ஆசைப்பட்ட மீன்களை வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டது.. ஆனால், இந்த மீன்உயர்வால் வியாபாரிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்தனர்.
வவ்வால்: அந்தவகையில், வஞ்சிரம் கிலோ 1,000 - 1,200 ரூபாய்க்கும், வெள்ளை வவ்வால் கிலோ 1,200 - 1,300 ரூபாய்க்கும், கறுப்பு வவ்வால் ரூ.700, சங்கரா ரூ.200 - 400, சீலா ரூ.500, நெத்திலி ரூ.200, நவரை ரூ.150, கிளிச்ச ரூ.50 - 100, கானாங்கத்த ரூ.150 - 200, நண்டு ரூ.250 - 500, இறால் 400 - 500 ரூபாய்க்கும் விற்பனையானது.
இது குறித்து மீனவர்கள் சொல்லும்போது, "எப்போதுமே, 20 கிலோ கூடை கிளிச்ச மீன், 500 ரூபாய்க்கு விற்பனையாகும்.. ஆனால், நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையானது... கானாகத்த 20 கிலோ கூடை, 2,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்ந்தது... வரி ஓரா மீன்கள் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையாகும்.. ஆனால், நேற்று 150 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தத்தில் படகில் கொண்டு வந்திருந்த எல்லா மீன்களும் நேற்று விற்று தீர்ந்தாகிவிட்டது.மீன்களும் நல்ல விலைக்கு விற்பனையாகியிருக்கிறது" என்றனர்.
மீன்கள் விலை: அதுபோலவே, கடலூர் துறைமுகத்தில் காசிமேட்டைவிட, கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது... சாம்பாரை, சென்னாஓரை, சங்கரா, சீலா, ஊலா, வஞ்சிரம், வெள்ளகிலங்கம் என பல்வேறு ரக விற்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆடி கிருத்திகை என்பதால் கடல் மீன்களின் விலை கடுமையாக சரிந்துவிட்டது..
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கடலூர் மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதும்.. ஆனால், நேற்று மீன்களின் விலை குறைந்திருந்ததால், கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அந்தவகையில், ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.800 விற்கப்பட்டன. சங்கரா ரூ.350, கிழங்கா மீன் ரூ.150, அட்டை மீன் ரூ.250, நெத்திலி ரூ.90, நண்டு ரூ.400 சீலா, வெள்ள கிலங்கம் வகை மீன்கள் ரூ.400, ஊலா ரூ.200, சாம்பாரை, சென்னா ஓரை மீன்கள் கிலோ ரூ.150 என விற்கப்பட்டன.
துறைமுகம்: மீன்கள் விலை குறைந்ததால், மீன்பிரியர்கள் நேற்று விடிகாலையிலிருந்தே ஆர்வத்துடன் துறைமுகம், மீன் மார்க்கெட்டுகளில் குவிந்தனர்... மக்கள் மீன்கள் வாங்க அலைமோதியதால் துறைமுகம் பகுதி நாள் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இதுபோலவே, நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் மீன்கள் வரத்து குறைந்த பகுதிகளில் விலை அதிகமாகவும், மீன்கள் வரத்து அதிகம் நிறைந்த பகுதிகளில் விலை குறைவாகவும் என வித்தியாசம் தென்பட்டது..
ஆடி அமாவாசை: ஆனால், அடுத்த வாரம் ஆகஸ்ட் 4ம் தேதி ஆடி அமாவாசை என்பதால், மீன்கள் இந்த அளவுக்கு விற்பனையாகாது.. அதுமட்டுமல்லாமம்ல, வரும் 1ம் தேதி கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வருகிறது... எனவே, வரும் வாரங்களில் மீன் விலை தமிழகம் முழுவதுமே நிச்சயம் குறைந்து காணப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications