Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்ல அத்தை, அப்பறம் சித்தி.. சென்னையை கலங்கடித்த கொளத்தூர் கணேசனை ஞாபகமிருக்கா? ஹைகோர்ட் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றம், முக்கிய தீர்ப்பு வழங்கி உள்ளது..
2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்னவென்று பார்ப்போம்.. சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சரவணன்.. இவருடைய மனைவி குணசுந்தரி.. 37 வயதாகிறது..

இவருடைய தம்பி லோகு என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன்.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் கொளத்தூரில் வசித்து வருகிறார்.. ஆனால் மனைவி இவருடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.

Chennai Kolathur incident and do you know what happened to the Aunty Gunasundari

கண்டிப்பு: மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில்,தான், கணேசனுக்கும், லோகுவின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.. அதாவது லோகுவின் மனைவி கணேசனுக்கு சித்தி முறை ஆகிறது. 5 மாதமாக இருவரும் ஜாலியாகவும் இருந்துள்ளனர். தன்னுடைய தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் இப்படி முறைதவறி நடப்பதை கண்டு அதிர்ந்தார் குணசுந்தரி..

அதனால் இந்த உறவை விட்டுவிடும்படி கணேசனை கண்டித்தார்... ஆனாலும், தன்னுடைய அத்தை குணசுந்தரி சொல்வதை கணேசன் கேட்கவில்லை.. ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, கணேசன் வீட்டுக்கு சென்று உறவை கைவிடும்படி திரும்பவும் சொல்லவும் தகராறு வெடித்தது. அப்போது, கணேசனுக்கு கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்துள்ளார் குணசுந்தரி.
தவறான உறவு: பொறுமை இழந்த கணேசன், ஒரு கத்தியை எடுத்து வந்து அத்தையை சரமாரியாக குத்திவிட்டார். இதில், சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார் அத்தை குணசுந்தரி. கணேசன் தப்பி ஓடியநிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி கைது செய்தனர். பிறகு சென்னை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதை கேட்டு போலீசாரே மிரண்டு விட்டனர்.

அப்போது கணேசன் வாக்குமூலத்தில் சொன்னதாவது: "முதலில் எனக்கும் என் அத்தை குண சுந்தரிக்கும்தான் தவறான உறவு இருந்தது.. அத்தைக்கு கல்யாணம் ஆனதும், நான் ஒதுங்கிட்டேன்.. அதனால என் சித்தியோட தொடர்பு வெச்சிக்கிட்டேன்.. நாங்க 2 பேரும் தனியா ஒரு வீடு எடுத்து அங்க தங்கியிருந்தோம்.. இதுவும் என் அத்தைக்கு பிடிக்கல.. அதனால எனக்கு தொந்தரவு தந்துட்டே இருந்தாங்க.

Chennai Kolathur incident and do you know what happened to the Aunty Gunasundari

நெருக்கம்: நாங்க நெருங்கி பழகியபோது அத்தை எனக்கு பண உதவி நிறைய பண்ணாங்க. அந்த பணத்தை இப்போ திரும்ப கேட்டு தொல்லை தர ஆரம்பிச்சாங்க.. இது சம்பந்தமாகத்தான் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்து பணம் கேட்டு தகராறு வந்தது.. சித்தியுடன் உறவு வெக்க கூடாதுன்னு பிரச்சனை பண்ணாங்க.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை பண்ணிட்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டேன்" என்று வாக்குமூலத்தில் கூறி அதிர வைத்திருந்தார்.

இதற்குபிறகு, கணேசனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. இது தொடர்பான வழக்கும், சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இத்தனை காலமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தீர்ப்பு: இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் தற்போது பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கணேசன் அவரது அத்தை குணசுந்தரியை கொலை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+