கோயம்பேட்டில் மாற்றம்.. திடீர்னு வந்த ஆபீசர்.. ஒரே அறிவிப்பில் ஆம்னிகளுக்கு "ஆப்பு".. பரபரத்த சென்னை
சென்னை: கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர் புகார்கள் குவிந்து வந்ததால், அதிகாரிகள் நேரடியாகவே ஆய்வில் ஈடுபட்டு, எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளனர். இது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான சந்தை என்ற பெருமைக்குரியது சென்னை கோயம்பேடு மார்க்கெட். அதனால்தான், இங்கு நாள்தோறும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிகின்றன.

ஆகவேதான், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) நிர்மாணிக்கப்பட்ட கோயம்பேடு மொத்தவிற்பனை அங்காடி வளாகம், அங்காடி நிர்வாகக் குழுவால் பராமரிக்கப்பட்டு வருகிறது.. முக்கியமாக, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள், உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதேபோல, மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலைகள், கோயம்பேடு மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும், என்று கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுற்றுத்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்படும், என்று கோயம்பேடு அங்காடி நிர்வாகம் அறிவித்தது.
நடவடிக்கை: இப்போது, இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கோயம்பேடு மார்க்கெட் அருகே இரவு நேரங்களில் ஆம்னி பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்பட்டுவிடுகிறது.. இதன்காரணமாக வாகனங்கள் செல்லமுடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகிவந்தனர்.. இது சம்பந்தமாக கோயம்பேடு போக்குவரத்து போலீசாரிடமும், வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரம், நேரடியாகவே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்துக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்..
வார்னிங்: இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, ''கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆம்னி பேருந்துகள் வரிசையாக நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. கோயம்பேடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம்... சாலையை ஆக்கிரமித்து நின்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கும் அபராதம் விதித்து வருகிறோம். இந்த நடவடிக்கை இனியும் தொடரும்' என்று அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications