கோயம்பேட்டில் காய்கறி விலையில் சர்ப்ரைஸ்? செடியிலேயே அழுகிடுச்சே தக்காளி.. சென்னை, கடலூரில் இப்படியா
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பயிர்கள் நாசமாகின்றன.. இதனால் காய்கறி விளைச்சலிலும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது... சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால், அவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் இல்லத்தரசிகள் கதிகலங்கி போயுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேளாண்மை மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது...

தக்காளி தோட்டங்கள்
வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், நெல், காய்கறி உள்ளிட்ட பல பயிர்கள் சேதமடைந்துள்ளன.. முக்கியமாக தக்காளி தோட்டங்களில், மழை தாக்கம் மிகுந்ததால் செடியிலேயே தக்காளி அழுகி வீணாகின்றன... இதன் விளைவாக தக்காளி உற்பத்தி கணிசமாக குறைந்து, சந்தைகளில் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் கிலோ விலை 70 ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், சில்லறை சந்தைகளில் 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பெரிய பெட்டிகளில் தக்காளி 1,700 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.. வரும் நாட்களிலும் மழை தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், விலை இன்னும் உயரக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
செடியிலேயே அழுகிய தக்காளி
தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்று காய்கறிப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்தன. காய்கறிகள் பயிர்கள் பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரவேண்டிய வரத்து பெருமளவு குறைந்துவிட்டதாலும், திருமண முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளுக்கான தேவை சந்தையில் அதிகரித்துள்ளது..
இதேபோல் பச்சை காய்கறிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் கடுமையான தாக்கம் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் திரண்ட மக்கள்
இதனால் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அவற்றின் விலைகள் திடீரென சரமாரியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, டிட்வா புயல் எச்சரிக்கையால் கடலூர் மாவட்டத்திற்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நீடித்த கனமழை அந்த பகுதியில் பதிவாகி வருகிறது.
பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க நிர்வாகம் அறிவுறுத்தியதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைகளில் கூட்டமாக திரண்டனர்... இதனால் காய்கறி, மளிகை, மருந்துகள், பால், பிரட், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை வாங்க பல கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.
தொடர்ச்சியான மழை, புயல் எச்சரிக்கை மற்றும் குறைந்த விளைச்சல் போன்றவற்றை கணக்கிட்டு சந்தை நிலவரம் அடுத்த சில நாட்களுக்கு இன்னும் மாற்றம் காணக்கூடும் என்று காய்கறி வியாபாரிகள் கணித்து கூறுகிறார்கள்.
லிஸ்ட் பாருங்க
சமையலில் அத்தியாவசியமாகக் கருதப்படும் காய்கறிகளின் விலை உயர்வு, இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. இதோ இந்த காய்கறி விலை லிஸ்ட்டை பாருங்கள்.
கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்பனையான வெள்ளை கத்தரிக்காய், மேலும் ரூ. 20 உயர்ந்து இப்போது கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான சந்தைகளில் வெள்ளை கத்தரிக்காய்க்கு டிமாண்டு ஏற்பட்டுள்ளதாம்.
.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை ஒரே நாளில் உயர்ந்து தற்போது ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் விலையும் உயர்ந்து கிலோ ரூ. 80 ஆக விற்பனை ஆனது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் தரத்திற்கு ஏற்ப ரூ. 75 வரை விற்பனை செய்யப்பட்டது.
எப்போது விலை குறையும்
ஊட்டி கேரட் விலையும் எகிறிவிட்டது.. எவ்ளோ தெரியுமா? கிலோ ரூ. 60-க்கு விற்பனை ஆகி கொண்ருக்கிறது.. பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், உருளைக்கிழங்கு விலையில் மாற்றமின்றி ரூ.30 முதல் ரூ.35 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ், பீட்ரூட் ஆகியவை கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன. தேங்காய் விலை மட்டும் சற்று குறைந்து ரூ. 65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது நிலவும் விலை உயர்வு காரணமாக, வருகிற பொங்கல் பண்டிகை வரை காய்கறிகளின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றம், இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications