வைபவ் சூர்யவன்சிக்கு திடீர் முட்டுக்கட்டை? தள்ளிப்போகும் அயர்லாந்து தொடர்.. சோகத்தில் சிறுவன்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பிய 15 வயது இளம் பேட்டர் வைபவ் சூர்யவன்சி, இந்திய சீனியர் அணியில் அறிமுகமாவது தற்காலிகமாகத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை மற்றும் அசாதாரண சூழல் காரணமாக இந்தத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்சி சேர்க்கப்பட்டிருந்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு மிக இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

Vaibhav Sooryavanshi

ஆனால், தற்போதைய சூழல் அவரது சர்வதேச அறிமுகத்தை சற்று தாமதப்படுத்தலாம் எனத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாத இறுதியில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி அயர்லாந்தின் சில முக்கியப் பகுதிகளில் திடீர் வன்முறை வெடித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத பிசிசிஐ, அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. நிலைமை சீரடையவில்லை எனில் இந்தத் தொடர் தள்ளிவைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஐபிஎல் தொடரில் 700-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்றார் வைபவ் சூர்யவன்சி.

இந்த அயர்லாந்து தொடரின் மூலம் சர்வதேச அரங்கில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தொடரில் சிக்கல் நீடித்தால், அவரது சர்வதேச அறிமுகப் போட்டி அடுத்து வரும் இங்கிலாந்து தொடருக்குத் தள்ளிப்போகும். அயர்லாந்து தொடருக்கு முன்னதாக, வைபவ் சூர்யவன்சி தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஏ-அணி தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.

மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாடும் இந்த அனுபவம் அவரது விளையாட்டுத் திறனை மேலும் மெருகேற்ற உதவும் என பிசிசிஐ தேர்வுக் குழு நம்புகிறது. சுனில் கவாஸ்கர் போன்ற மூத்த வீரர்கள், வைபவ் சூர்யவன்சியின் வயதைப் பார்க்காமல் அவருக்கு உடனடியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளனர்.

இதனால் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அயர்லாந்து நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தைப் பொறுத்தே வைபவ் எப்போது இந்திய அணியின் ஜெர்சியில் களம் காண்பார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும். வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதால் இந்தியா ஏ போட்டிகளை பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+