சென்னையில் ‘96’.. புதிய அரசு பஸ் வழித்தடத்தை தொடங்கிய எம்.டி.சி! இந்த ரூட்ல இனி பயணம் ரொம்ப ஈசி!
சென்னை: சென்னையில் '96' என்ற புதிய அரசு பஸ் வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் முதல் அடையாறு பேருந்து நிலையம் வரை '96' என்ற புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்துள்ளது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்.
இந்த 96 வழித்தட பேருந்து கேம்ப் ரோடு, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி வழியாக அடையாறு சென்றடையும். 7 பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னையில் வேறு எந்த நகரங்களிலும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளுக்கான வசதியை மேம்படுத்தும் விதமாக ஏசி, தாழ்தள பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் '96' என்ற புதிய அரசுப் பேருந்து வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் முதல் அடையாறு பேருந்து நிலையம் வரை '96' என்ற புதிய வழித்தடத்தை அறிமுகம் செய்துள்ளது சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம். இந்த வழித்தடத்தில் 7 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
வழித்தடம்:
அடையாறில் இருந்து ஜெயந்தி தியேட்டர், சென்னை ஒன் (ரேடியல் சாலை), காமாட்சி மருத்துவமனை, பள்ளிக்கரணை, கேம்ப் ரோடு, எஸ்.ஆர்.பி டூல்ஸ், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம் செக்போஸ்ட், மேடவாக்கம், சந்தோசபுரம், செம்பாக்கம், தாம்பரம் கிழக்கு வழியாக சென்றடையும்.
கால அட்டவணை
அடையாறு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் நேரம்: 04.50, 05.15, 05.40, 06.05, 06.30, 06.55, 07.20, 07.40, 08.05. 08.30, 09.00, 09.35, 10.10, 10.40, 11.05, 11.30, 11.55, 12.20, 12.50, 13.25, 13.55, 14.20, 14.45, 15.10, 15.35, 16.00, 16.30, 17.05, 17.35, 18.00, 18.25, 18.50, 19.15, 19.45, 20.25 hrs.
தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரம்: 06.15, 06.35, 07.00, 07.25, 07.55, 08.30, 09.00, 09.20, 09.45, 10.15, 10.45, 11.10, 11.45, 12.15, 12.45, 1310, 13.30, 14.00, 14.25, 15.00, 15.30, 15.55, 16.20, 16.45, 17.10, 17.40, 18.10, 18.45, 19.15, 19.45, 20.20, 20.35, 21.00, 21.30, 22.00 hrs.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்












Click it and Unblock the Notifications