சென்னை மக்கள் கவனத்துக்கு.. 3 நாட்களுக்கு 17 புறநகர் ரயில்கள் ரத்து.. எந்த வழித்தடங்களில் தெரியுமா?
சென்னை: சென்னையில் முக்கியப் போக்குவரத்தாக உள்ள புறநகர் ரயில் சேவையையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னையில் இன்றும், ஆகஸ்ட் 16, 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பயணிகளின் முக்கிய போக்குவரத்து சேவையாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பிரதானமாக இருக்கும் நிலையில், புறநகர் ரயில் சேவைகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலை செய்வோர் என அனைவருக்கும் பெரிதும் உதவி வருகிறது.

மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையேன்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது. சென்னை பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாகும்.
இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள், பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னையில் இன்றும், ஆகஸ்ட் 16, 18 ஆகிய தேதிகளில் 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து காலை 10.15, பிற்பகல் 12.10, 1.05 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்கள், காலை 1.30, 11.35 மணிகளுக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், சூலூா் பேட்டையில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூா், பிற்பகல் 1.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி, 3.10, இரவு 1 மணிக்கு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு சென்னை கடற்கரை, பிற்பகல் 12, 2.30, 3.15, மணிக்கு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய ரயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில் சென்னை கடற்கரை வரையிலும் 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதியான இன்றும் மற்றும் ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூா்மாா்க்கெட்டில் இருந்து காலை 10.30 க்கு பொன்னேரிக்கும், பகல் 1.35 மணிக்கு பொன்னேரிக்கும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும், பொன்னேரியில் இருந்து பிற்பகல் 12.18 மணிக்கு மூா்மாா்க்கெட்டுக்கும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெடுஞ்சாலைகளா? நகரச் சாலைகளா? டெல்லி பிளானை கையில் எடுத்த ஸ்டாலின்.. தரமான 'செக்' மேட்! -
தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி -
ABP: மீண்டும் திமுகவின் கோட்டையாகிறதா சென்னை? தலைநகரில் அக்கவுன்ட் ஓபன் செய்யும் தவெக? ஏபிபி சர்வே -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னை டூ நெல்லைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில்கள்! கோடை லீவுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே -
மிகப்பெரிய இரும்பு ராட்சசன்.. சென்னையின் 2 பெரிய பகுதிகளை இணைக்கும் கோடு! வரப்போகும் மெகா மாற்றம் -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
சென்னை தலைமைச் செயலகத்தை அதிரவைத்த காவலர் கோதண்டபாணி.. என்ன நடந்தது? -
ஆபீஸ் மீட்டிங்ல நீங்க எந்த சீட்ல உட்காருவீங்க? உங்க 'சீட்' செலக்ஷன் சொல்லும் ரகசியங்கள் இதோ! -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும்












Click it and Unblock the Notifications