சென்னை பயணிகள் கவனத்துக்கு.. இன்று 17 புறநகர் ரயில் சேவைகள் ரத்து.. லிஸ்டை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் இன்று (ஜூன் 9) மற்றும் நாளை மறுநாள் ஜூன் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனால், 17 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை பயணிகளுக்கு வரப்பிரசாதமாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையென்றால் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.

சென்னை பயணிகளுக்கு புறநகர் மின்சார ரயில் சேவைகள் என்பது பெரும் வரப்பிரசாதமாகும். சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டும் இல்லையேன்றால் ஊரே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்துக்கு சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பெரும் பங்காற்றி வருகிறது.
இந்த ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் ஜூன் 9 ஆம் தேதி மற்றும் ஜூன் 12 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமிப்புப் பணிகள் ஜூன் 9, 12 (திங்கள்கிழமை, வியாழக்கிழமை)ஆகிய தேதிகளில் காலை 11.20 முதல் பிற்பகல் 3.20 மணி வரை நடைபெறவுள்ளது.
இதனால், இந்தப் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடிஎன இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன. இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையில் இருந்து பொன்னேரி, எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளன.
காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, வாலாந்தூா், குடியாத்தம் ஆகிய ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஜூன் 9-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளன.
இதனால், அந்த நாளில் காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications