அபார்ஷன் பண்ண முடியல.. தனக்கு தானே பிரசவம் பார்த்து.. குழந்தையை "பிய்த்த" நர்ஸ்.. கைதாகிறார் வினிஷா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டு, இந்த நர்ஸ் தந்த அதிர்ச்சியிலிருந்து, தமிழகம் இன்னும் மீளவில்லை.. இப்போது இவர் மீது கொலை கேஸ் பதிவாகியிருக்கிறதாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது வினிஷா என்பவர் சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்ஸாக வேலை பார்த்து வருபவர்.. இவர் தி.நகர் சவுத்போக் பகுதியில், தன்னுடன் வேலைபார்க்கும் தோழிகளுடன் தங்கி இருந்தார்.

Chennai Mambalam police case filed against Kanniyakumari Nurse due to Self Delivery in the Bathroom

செல்வமணி என்பவரை வினிஷா காதலித்து, அதன்மூலம் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைக்க முயன்றபோது அவரால் முடியவில்லை. திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகிவிட்டதால், குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல் மறைத்தார்... இப்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.. நேற்றுமுன்தினம் வினிஷாவுக்கு திடீரென பிரசவ வலி வந்திருக்கிறது..

பாத்ரூம்: கழிவறைக்கு சென்று தனக்குதானே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார்.. ஆனால், பிரசவ வலியை வினிஷாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. இதனால், கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து, ஓங்கி இழுத்தார்.. வலி பொறுக்க முடியாமல், வலுவாக இழுத்ததால், சிசுவின் கால்கள் பிய்ந்துவிட்டது.. பிறகு ஒரு காலை மட்டும் வெட்டியெடுத்துள்ளார். அந்த குழந்தையும் பேச்சு மூச்சின்றி வெளியே வந்து விழுந்தது..

நர்சின் அலறல் சத்தம் கேட்டதுமே, உடன் தங்கியிருந்த தோழிகள் குழந்தையின் உடலையும், நர்சையும் மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

தனக்குதானே: இதுகுறித்து, போலீஸார் சொன்னதாவது: "நர்ஸ் தனக்கு தானே பாத்ரூமில் பிரசவம் பார்த்திருக்கிறார்.. வயிற்றிலிருந்து குழந்தை வெளிவந்த போது அவருக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது... உடனே குழந்தையின் கால்கள் இரண்டையும் வெட்டி எடுத்துள்ளார். இதில், ஒரு காலை மட்டும் கழிவறையில் வீசியிருக்கிறார். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை வயிற்றிலிருந்து வெளியில் எடுத்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நர்சுக்கு எழும்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... குழந்தையின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இதற்கு பிறகே குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது உயிருடன் பிறந்த குழந்தையை நர்சு கொலை செய்தாரா? என்பது தெரிய வரும்.

குழந்தை: குழந்தையை கொன்றதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். குழந்தையை கொன்றது உறுதி செய்யப்பட்டால் தற்போதுள்ள வழக்குவழக்கு பிரிவுகள் மாற்றப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்படும்.. நர்சிடம் நெருங்கி பழகிய மதுரை இளைஞர் குறித்தும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. அவரிடம் DNA பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது.. அதில், பிரசவத்தின்போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால்தான், குழந்தை இறந்துள்ளது என்பது ரிப்போர்ட்டில் பதிவாகி உள்ளது..

கைது: இதையடுத்து நர்சு மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.. ஆனால், குழந்தையை கத்தியால் வெட்டியபோது நர்சுக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதாம். இதற்கான தீவிர சிகிச்சைதான் நடந்து கொண்டிருக்கிறது.. எனவே, சிகிச்சை முடிந்ததும் நர்சு கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+