நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நின்றபடி ரீல்ஸ் பதிவு - வீடியோ வைரலான நிலையில் இளைஞர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நீதிமன்ற அறையின் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் ரீல்ஸ் பதிவிட்ட பரத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீதிமன்ற அறைக்குள் நடப்பதை வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Court police viral

குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பரத், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி குற்றவாளிக் கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Mr.super smoker boy என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பரத் என்ற இளைஞர் சமீபத்தில் குற்ற செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நின்றபடி அதனை நீதிமன்றத்திற்கு உள்ளே இருந்த மற்றொரு நபர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கானா பாடல் இசையுடன் instagram-ல் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்ட நிலையில், அந்த நபர் பகிர்ந்த வீடியோ வைரல் ஆனது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ குறித்து பலரும் அந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நீதிமன்ற அறைக்குள் நடப்பதை வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை கைது செய்துள்ளனர். விசாரணையில் சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரின் பெயர் பரத் என்பதும், இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது, தனது நண்பரை வீடியோ எடுக்குமாறு கூறி பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டதும் தெரியவந்துள்ளது.

கைதான பரத் (24) மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வீடியோ எடுத்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+