இருட்டுல ஆணும், பெண்ணும் உட்கார கூடாதா சார்? சென்னை மெரினாவில் போலீசுடன் பெண் வாக்குவாதம்! கடைசியில?
சென்னை: பீச்சுல யாரும் உட்கார கூடாதா? நைட் நேரத்தில் இங்கே உட்காரக்கூடாது என்று சட்டம் ஏதாவது இருக்கா?" என்று சென்னை மெரினாவில், போலீஸாருடன் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. என்ன நடந்தது?
சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக மெரினா பீச் திகழ்ந்து கெண்டிருக்கிறது.. எனவே, இங்கு பல்லாயிரக்கணக்கான பேர் வந்து செல்வது வழக்கமாகும்..

எனினும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீசார் பீச்சில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், நேற்று இரவு, பீச் மணலில் ஆண் -பெண் ஒன்று உட்கார்ந்திருந்தது.. அவர்களிடம் சென்ற ஒரு போலீஸ்காரர், 'நீங்கள் கணவன் மனைவியா, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டார்..
கணவணும், மனைவியும்
உடனே அந்த பெண், தன்னுடைய செல்போனில் வீடியோவை ஆன் செய்துவிட்டு, "முதல்ல கணவன், மனைவியான்னு ஏன் சார் கேட்டீங்க? எங்களை ஏன் சார் அப்படி கேட்டீங்க? 2 பேர் உட்கார்ந்திருக்காங்கன்னா, கணவன் மனைவியான்னுதான் கேட்பீங்களா? லவ்வர்ஸான்னு கேட்கிறீங்க? இப்படி உங்களை கேட்கணும்னு டிப்பார்ட்மென்ட்டில சொல்லி தந்தாங்களா?
ஆணும், பெண்ணும் பீச்சில் தனியா உட்கார கூடாதுன்னு சட்டம் ஏதாவது இருக்கா? அப்படி கேட்கக்கூடாது சார்.. அது அநாகரீகமான விஷயம்.. பீச்சில கணவன், மனைவி மட்டும்தான் உட்காரணும்னு அவசியம் கிடையாது.. லவ்வரா இருக்கணும்னு அவசியம் இல்லை" என்று அந்த பெண் சொல்கிறார்.
இருட்டுல உட்காருவது தப்பு
அதற்கு போலீஸ்காரர், "நான் உங்க கிட்ட ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தனியாக இருப்பவர்களை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.. பீச்சில் 2 பேர் உட்காருவது தப்பு, யாருமில்லாத நேரத்தில் தனியாக உட்காருவது தப்பு.. இப்படி இருட்டுல உட்காருவது தப்பு" என்று போலீஸ்காரர் சொன்னதுமே, "இது இருட்டா சார்?" என செல்போனை சுற்றுமுற்றும் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தை காண்பிக்கிறார் அந்த பெண்.
"நைட் நேரத்தில் எங்கே சார் நாங்கள் உட்கார்திருந்தோம்? இங்கே ஏதாவது அநாகதீகமாக நடந்ததை நீங்க பார்த்தீங்களா?"
என்று அந்த பெண் கேட்கிறார்.. ஆனாலும், போலீஸ்கார், பெண்ணிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோதான் இணையத்தில் பரவிபெரும் வைரலாகி கொண்டிருக்கிறது.
போலீஸ்காரர் மீது பாய்ந்த ஆக்ஷன்
இந்நிலையில் பீச்சில் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர், தற்போது டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், கமிஷனர் அருண் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
எனினும், இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டுவருகிறது.. சென்னை பீச் உட்பட பல்வேறு இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. எத்தனையோ சமூகவிரோதிகளை இளம் பெண்களை மிரட்டி பீச்சுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லைகள் தந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது..
ஆதரவும் - எதிர்ப்பும் - விவாதங்கள்
எனவே போலீஸ்காரர் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்படி கேள்விகளை கேட்டிருக்கலாம்.. போலீஸ்காரர் அவருடைய கடமையைதான் செய்துள்ளார்.. அவருக்கு எதுக்கு டிரான்ஸ்ஃபர்? எத்தனையோ போலீஸ்காரர்கள் கடமை தவறி, லஞ்சம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கடமையை செய்தவருக்கு தண்டனை தேவையில்லாத ஒன்று என்று, அந்த போலீசாருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்..
ஆனால், மேலும் சிலர், நிஜமான கணவன் - மனைவிகூட பீச்சில் கொஞ்ச நேரம் தனியாக உட்கார முடிவதில்லை. ஒருசிலர் செய்யும் அநாகரீகமான காரியங்களால், உண்மையாக உள்ள 2 காதலர்கள், அல்லது தம்பதிகளையும் சந்தேகப்படுவது சரியல்ல.. அந்த பெண் கேட்டதில் எந்த தவறுமில்லையே? என்று அப்பெண்ணுக்கு ஆதரவாகவும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
பெண் வக்கீல் காட்டம்
இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண், ஒரு வக்கீல் என்பது அவரது சோஷியல் மீடியா பதிவிலிருந்து தெரியவந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பட்டினப்பாக்கம் ரோந்து போலீஸ் எஸ்.ஐ.,யும் போலீஸ்காரரும் குண்டர்களைப் போல செயல்பட்டனர். அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படி பொதுமக்களை மிரட்டும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை" என்று பதிவிட்டிருக்கிறார். இப்போது பெண் வக்கீலின் இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications