சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறுத்துங்க! நிறுத்துங்க! சட்டென நின்ற மேயர் பிரியா! யோசித்த ககன் தீப்! அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று மேயர் பிரியா பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதேபோல் மக்களை சந்தித்து பல்வேறு உதவி பொருட்களை வழங்கினார்.

Recommended Video

    சாலையோரக்கடையில் கூழ் குடித்த மேயர் பிரியா - வீடியோ

    சென்னை மேயர் பிரியா சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ பிடித்த போது மேயர் பிரியா அதை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    சென்னை மேயர் பிரியா சொல்வது பச்சை பொய்.. டிடிவி தினகரன் காட்டம்.. அம்மா உணவக விவகாரத்தில் ஆவேசம் சென்னை மேயர் பிரியா சொல்வது பச்சை பொய்.. டிடிவி தினகரன் காட்டம்.. அம்மா உணவக விவகாரத்தில் ஆவேசம்

    ராஜீவ் காந்தி

    ராஜீவ் காந்தி

    ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த வாரம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சை பிரிவிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் மேயர் பிரியா பார்வையிட்டது இணையம் முழுக்க வைரலானது. அவர் வேகமாக காரில் ராஜீவ் அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். கையில் போனை வைத்துக்கொண்டு.. காரில் இருந்து இறங்கி தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அவர் வேகமாக ஓடி சென்றது வைரலானது.

    சென்னை மேயர்

    சென்னை மேயர்

    இந்த நிலையில்தான் இன்று கோடம்பாக்கம் மண்டலத்தில் மேயர் பிரியா பார்வையிட்டார். கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136 சிவன் பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் வீடுகளில் இருந்து பெறப்பட்ட காய்கறி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தினை பொதுமக்கள் பயண்பாட்டிற்கு மேயர் பிரியா இன்று வழங்கினார். இந்த திட்டத்தின் படி காய்கறி கழிவுகள் மக்களிடம் இருந்து வாங்கப்பட்டு அதில் உரம் தயாரிக்கப்பட்டது. நவீன முறைப்படி அந்த உரம் உருவாக்கப்பட்டது.

    மேயர் பிரியா

    மேயர் பிரியா

    இதையடுத்து அந்த உரம் மீண்டும் கழிவுகள் வாங்கப்பட்ட மக்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக மேயர் பிரியா இன்று கோடம்பாக்கத்தில் பல்வேறு வீடுகளில் ஏறி இறங்கினார். அதன்பின் பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர், புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை அவர் பார்வையிட்டார். கோடை காலத்தில் வெளியே சென்றதில், அவருக்கு தாகம் ஏற்படவே கூழ் கடை ஒன்றை பார்த்ததும் உடனே நிறுத்தும்படி கூறினார். நிறுத்துங்க.. நிறுத்துங்க.. கூழ் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று கூறினார்.

    கூழ் கடை

    கூழ் கடை

    சாலை ஓரத்தில் அந்த கூழ் கடை பெண் ஒருவர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கே நின்றதும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தார். பின்னர் அவரும் அங்கேயே கூழ் வாங்கி குடித்தார். பின்னர் மேயர் பிரியாவும், அங்கு இருந்த மற்ற அதிகாரிகளும் அதே கடையில் கூழ் வாங்கி குடித்தனர். சாலையோர தள்ளுவண்டியில் சென்னை மேயர் பிரியா கூழ் வாங்கிக் குடித்தது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

    English summary
    Chennai Mayor Priya had Koozh in Kodambakkam amid summer. சென்னையில் இன்று மேயர் பிரியா பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதேபோல் மக்களை சந்தித்து பல்வேறு உதவி பொருட்களை வழங்கினார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X