1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு.. மிக கனமழை கொட்ட போகுது.. முக்கிய அலார்ட்
சென்னை: 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.இதேபோல் 'புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தல் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

12 மாவட்டங்களில்
அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

பல மாவட்டங்களில் கனமழை
அடுத்த 48 மணி நேரத்தில் (09.10.2020) பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதேபோல் அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், சேலம், நாமக்கல், ஈரோடு கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அதனை அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்.

சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கு அதிக மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குப்பநத்தத்தில் 14 செமீ மழை பெய்துள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில், மே, மாத்தூரில் தலா 11 செமீ மழை பெய்துள்ளது. விருத்தாச்சலம், வருதாச்சலம், பிளந்துறை ஆகிய ஊர்களில் 9 செமீ மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 8 செமீ, கந்தர்வக்கோட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், நாமக்கல், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (10.10.2020) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும். எனவே மீனவர்கள் மத்திய வங்ககடல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். அங்கு மணிக்கு சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதியிலும், ஒடிசா கடல் பகுதியிலும் மீனவர்கள் செல்ல வேணடாம்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications