சென்னையில் மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் ஜில் ஜில் அறிவிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு;

வறண்ட வானிலை
18.01.2022 அதாவது இன்று தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதே போல் நாளை முதல் சனிக்கிழமை வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மழைக்கு வாய்ப்பு?
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர் (திருவள்ளூர்) 5 செமீ, திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 4 செமீ, எம் ஜி ஆர் நகர் (சென்னை ) 3 செமீ, எம் ஆர் சி நகர் (சென்னை), ஒய் எம் சி ஏ நந்தனம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் , காரைக்கால், வாலாஜா (ராணிப்பேட்டை ) தலா 2, செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), திருவள்ளூர் , கோத்தகிரி (நீலகிரி) , கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) , ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) , திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது..

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்பது கவனிக்கத்தக்கது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications