சென்னையே நிமிருதே.. முதல் முறையாக வெறும் "4 நம்பர்"தான்.. சென்னை மெட்ரோ அதிரடி.. குஷியில் பெண்கள்
சென்னை: சென்னை மெட்ரோ சூப்பர் அதிரடியை கையில் எடுத்துள்ளது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள். என்ன காரணம் தெரியுமா?
சென்னையில் உள்ள மக்களுக்கு ரயில்சேவைகளின் தேவை அத்தியாவசியமானதாக இருந்து வருகிறது.. இதில் மெட்ரோ ரயிலின் பயன்பாட்டை குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டு + பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு, 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.
பயன்பாடுகள்: சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்காகவும், சென்னை மக்கள் அதிகம் நாடுவது, மெட்ரோ ரயிலாகவே இருந்து வருகிறது. அதனால்தான், மெட்ரோவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது.. மெட்ரோவில் மக்களின் பயன்பாட்டு எண்ணிக்கை குறித்து, மெட்ரோ நிறுவனமானது, முக்கிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ மீண்டும் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்தில்கூட, அறிவிப்பு வெளியாகியிருந்தது.
கிளாம்பாக்கம்: அதுமட்டுமல்லாமல், சென்னை புறநகர் பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை வழங்கும் பணிகள் துரிதமாகி வருகின்றன.. இதனால், சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வரை 2ம் கட்ட வழித்தட பணிகளுக்கான சாத்தியக்கூறு அறிக்கையும் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கிய அறிவிப்பை மெட்ரோ வெளியிட்டுள்ளது.
அதாவது, மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை, மேலும் மேம்படுத்தும் வகையில், ஹெல்ப் லைன் ஒன்று, வெளியிடப்பட்டுள்ளது.
பெண் பயணிகள்: இதுவரை, 186042 51515 என்ற பொது உதவி நம்பர்தான், சிஎம்ஆர்எல் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மெட்ரோவில் பயணிக்கும், பெண் பயணிகளிடம், கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது, மெட்ரோ ரயிலில் தங்களது பயண அனுபவத்தை பெண் பயணிகள் பகிர்ந்திருந்தனர்.. குறிப்பாக, மெட்ரோவில் பயணிக்கும்போது, தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனினும், ஒருசில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால், அதையும் நிவர்த்தி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று, தங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்களாம்.
பெண்கள் குஷி: இந்த கருத்துக்கணிப்பு அடிப்படையிலும், அப்பெண்களின் பரிந்துரையின் பேரிலும்தான், அவர்களது பாதுகாப்புக்காகவே, தற்போது 4 இலக்கு ஹெல்ப் லைன் நம்பரை அறிமுகம் செய்யப்போகிறார்களாம். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு இது தொடர்பாக கடிதமும் எழுதப்பட்டிருப்பதால், விரைவில் இந்த ஹெல்ப் லைன் நம்பர் கிடைத்துவிடும் என்கிறார்கள்.
இந்த நம்பரும் கிடைத்துவிட்டால், மெட்ரோவில் மேலும் அதிகமாகவே பெண்கள் பயணம் செய்வார்கள் என்றும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சி: இப்போது உள்ளதுபோல 11 இலக்கு நம்பர் போல இல்லாமல், வெறும் 4 எழுத்து மட்டுமே ஹெல்ப் லைன் நம்பராக இருக்கபோவதால், யார் வேண்டுமானாலும், இந்த நம்பரை எளிதில் ஞாபகம் வைத்துகொள்ள முடியும் என்கிறார்கள். மெட்ரோவின் இந்த நடவடிக்கையானது, பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications