சென்னை மக்களே.. மேஜர் சேஞ்ச்! நாளை முதல் 4 நாட்களுக்கு சென்னை மெட்ரோ அட்டவணையில் மாற்றம்!
சென்னை: நாளை முதல் ஜனவரி 17 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு அட்டவணையின்படியும் 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் விடுமுறையை அடுத்து, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதால் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் அதிகளவிலான மக்கள் குவிந்தனர்.

சென்னை மெட்ரோ
மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்காக மெட்ரோ ரயில்களையும் ஏராளமானோர் பயன்படுத்தினர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னை மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 3.20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை - ரயில் அட்டவணை
இந்நிலையில், பொங்கல் பண்டிகை நாளான நாளை செவ்வாய்க்கிழமை, புதன், வியாழன் ஆகிய விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/ விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிறு/ விடுமுறை நேர அட்டவணை:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
சனிக்கிழமை அட்டவணை
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications