சென்னையில் ஆலந்தூர் டூ பரங்கிமலைக்கு புதிய மேம்பாலம்.. மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ மாறுது
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் ரயிலில் ஏறினால், பரங்கிமலை வர வேண்டும் என்றால் ஆலந்தூரில் இறங்க வேண்டும்.. அதேபோல் பரங்கிமலையில் இருந்து நந்தனம் வழியாக மெட்ரோ போக வேண்டும் என்றாலும் ஆலந்தூரில் இறங்கி மாற வேண்டும். இந்நிலையில் ரயில் பயணத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் இடமாற்றங்களை நீக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), ஆலந்தூரிலிருந்து பரங்கிமலை வரை புதிதாக 1.25 கி.மீ மேம்பாலத்துடன் ஐந்தாவது வழித்தடத்தை (மாதவரம்-சோழிங்கநல்லூர்) விரிவுப்படுத்த போகிறது.
சென்னையில் வேளச்சேரி பரங்கிமலை இடையே எப்போது மின்சார ரயில் ஓடும் என்று தெரியாமல் பரிதவித்து போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.. அவர்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை மத்திய அரசு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. இனிமேல் தான் பணிகள் வேகமெடுக்கும் என்றாலும், மெட்ரோ பணிகள் காரணமாக அடுத்த ஓராண்டிற்கு வேளச்சேரி பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆலந்தூரில் இறங்க வேண்டும்
இது ஒருபுறம் எனில், தற்போதைய நிலையில் பரங்கிமலையில் உள்ள ரயில் பயணிகள் சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை வழியில் அல்லது விமான நிலையத்திற்கு செல்ல மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆலந்தூரில் இறங்கி மாற வேண்டிய நிலை இருந்தது . அதேபோல் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் ரயிலில் ஏறினால், பரங்கிமலை வர வேண்டும் என்றால் ஆலந்தூரில் இறங்க வேண்டிய நிலை இருந்தது. இது பயணிகளுக்கு சற்று கடினமாகவே இன்று வரை உள்ளது.
மாதவரம்-சோழிங்கநல்லூர்
இந்நிலையில் ஆலந்தூரில் இருந்து 1.25 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலத்தை கட்டுவதற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், வழித்தடம் ஐந்தான மாதவரம்-சோழிங்கநல்லூர் நீட்டிக்கப்பட உள்ளது. முன்னதாக மெட்ரோ நிறுவனத்தில் ஒரிஜினல் திட்டப்படி மாதவரத்திலிருந்து மடிப்பாக்கம், மேடவாக்கம் அல்லது சோழிங்கநல்லூர் போன்ற தெற்கு புறநகர்ப் பகுதிகளை நோக்கி பயணிக்கும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி மற்றொரு ரயிலில் ஏற வேண்டிய நிலை தான் இருந்தது. தற்போது திருத்தப்பட்ட சீரமைப்புடன், ரயில்கள் தங்கு தடையின்றி இயக்க முடியும்
புதிய மேம்பாலம்
இந்த புதிய இணைப்பு, ஏற்கனவே உள்ள மேம்பாலத்திற்கு இணையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தண்டவாளங்கள் மேல் செல்லும் ரயில்களுக்கும், இரண்டு தண்டவாளங்கள் கீழ் செல்லும் ரயில்களுக்கும் இருக்கு என்றும், இந்த முடிவின் காரணமாக பரங்கிமலை ரயில் நிலையம் சென்னையில் தாம்பரத்திற்கு அடுத்தபடியாக நான்காவது மிக முக்கியமான வழித்தடமாக உருவெடுக்க உள்ளது.
காரிடர் 2ல் சில பகுதி இடிப்பு
புதிய 1.25 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலத் திட்டத்திற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நிலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. மேலும், பரங்கிமலை ரயில் நிலைய சாலைக்கு அருகில் உள்ள காரிடர் இரண்டின் கட்டமைப்பின் சில பகுதிகளை இடிக்க உள்ளனர். வளைவுகளை சரிசெய்து புதிய இணைப்புக்கு ஏற்றவாறு மாற்ற உள்ளார்கள். இந்த புதிய கட்டிடம் மற்றும் பயணிகள் வசதிகள் மவுண்டில் காலியாக உள்ள இடத்தில் வரப்போகிறது. எனவே ஆலந்தூருக்கு இணையாக ஒரு முக்கிய தெற்கு போக்குவரத்து மையமாக மாறும் என சென்னை மெட்ரோ அதிகாரிகள் கூறினார்கள்.
பரங்கிமலை பறக்கும் ரயில் எப்போது
அதேபோல் பரங்கிமலையுடன் பறக்கும் ரயில் இணைக்கப்பட உள்ளதால், புதிய மேம்பாலத் திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, எனினும் வேளச்சேரியிலிருந்து எப்போது மெட்ரோ ரயில் ஓடும் என்பது இனி தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தான் தெரியும். அதேநேரம்
சென்னை மெட்ரோ நிறுவனம் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையோ வழித்தடத்தை ( ஐந்தாவது வழித்தடத்தை) 2026 ஆம் ஆண்டு தொடங்க இலக்கு வைத்துள்ள நிலையில், அதற்குள் பறக்கும் ரயில் பணிகள் முடித்து தெற்கு ரயில்வே ஒப்படைத்தால், இரண்டு நெட்வொர்க்குகளும் ஒன்றாகத் திறக்கப்பட வாயப்பு உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications