மழை காலம் வந்துடுச்சு.. உடனே போனை எடுங்க.. தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு! யாருக்கெல்லாம் பொருந்தும்?
சென்னை: தமிழ்நாட்டில் மழைக்காலம் நெருங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவு சென்னை மக்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முதல்நாள் வெளியிட்ட அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. அதன் தாக்கம் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் வலுவான வடகிழக்கு காற்று வலுப்பெற்ற பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியது.

புயல் உருவானது: அதன்படியே மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது.
ஈரான் நாடு பரிந்துரைந்துள்ள 'ஹாமூன்' என்ற பெயர் இந்த புயலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று தீவிர புயலாக வலிமை அடையும். அதி தீவிர புயலாக வலிமை அடையும் முன் இது நாளை நண்பகலில் வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என கணிப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நேரடியாக தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாது. புயல் எதிர் திசையில் நகர்வதால் தமிழ்நாட்டில் பெரிய அளவில் நேரடியாக மழை பெய்யாது.
அதன்படி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
முக்கிய உத்தரவு: தமிழ்நாட்டில் மழைக்காலம் நெருங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவு சென்னை மக்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பருவமழை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது. மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி தண்ணீர் தேங்குவது மற்றும் விழுந்த மரங்களைப் பற்றிய புகாரளிக்கலாம். அதே நேரத்தில் அதிகாரிகள் இந்தக் புகார்களை கண்காணித்து பதிலளிக்க முடியும்.
வொர்க்ஃபோர்ஸ் ஆப் எனப்படும் இந்த செயலி, பல்வேறு முனிசிபல் ஏஜென்சிகளுக்கான தொடர்புத் தகவல்களையும் கொண்டிருக்கும். இது நீர் நிலைகளை நிகழ்நேர கண்காணிப்பை செய்து வெள்ளத்தை தடுக்க உதவும். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கும். கூடுதலாக, பல்வேறு குடிமைப் பிரச்சினைகளுக்கான புகார் தீர்வை மையப்படுத்துவதற்காக, இந்த பக்கத்தை அதி நவீன் தொழில் நுட்பத்துடன் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ளது.
இந்த இயங்குதளம் ஆண்டு முழுவதும் செயல்படும் மற்றும் மழை காலத்தில் ஹெல்ப்லைன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழி வகுக்கும். இது கழிவு மேலாண்மை, சாலை சேதம் மற்றும் விலங்குகள் மரணம் உட்பட 27 வகை புகார்களை அளிக்கும் வசதியை கொண்டது ஆகும். பருவமழை தயார்நிலையை மேம்படுத்த இந்த பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications