இனி சாலையில் போகும் போது.. இதுதான் உங்க கண்ணில் படும்.. சென்னை மெட்ரோவிற்கு கொட்டப்போகும் பண மழை
சென்னை: புதிய வகையில் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறை ஒன்றை சென்னை மெட்ரோ நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.
சென்னை மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புதிய மெட்ரோ பாதைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன. 2027ம் ஆண்டிற்குள் மெட்ரோ கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய வகை: இந்த நிலையில்தான் புதிய வகையில் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறை ஒன்றை சென்னை மெட்ரோ நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) புதிய வருமானத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக அதன் உயரமான நீளங்களின் தூண்களில் விளம்பரங்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ஏலம் விடப்பட்டு இன்னும் சில மாதங்களில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த விளம்பரங்களில் நகரத்தின் கலாச்சாரம் மற்றும் மாநில சுற்றுலாவை சித்தரிக்கும் விதமாக விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது பற்றி சிஎம்ஆர்எல் அதிகாரிகள் கூறுகையில், திருமங்கலம்-சிஎம்பிடி, சிஎம்பிடி-அசோக் நகர், அசோக் நகர்-ஈக்காட்டுத்தாங்கல், ஈக்காட்டுதாங்கல்-ஆலந்தூர், சைதாப்பேட்டை-கிண்டி, கிண்டி-ஆலந்தூர் ஆகிய இடங்களில் உள்ள தூண்களில் விளம்பரங்கள் வரையப்படும். தூண்களில் உள்ள இடத்தை பணமாக்குவதற்காக இந்த திட்டம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் கட்டணம் வருவாயைக் கொண்டு வந்தாலும், அது நிச்சயமாக போதுமானதாக இல்லை. இதன் காரணமாகவே விளம்பரம் மூலம் வருவாயை ஈட்ட முடிவு செய்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications